வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சீருடைகளுடன் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர். அவரது வீட்டை மேலும் சோதனை செய்தபோது, பாவனைக்கு உதவக்கூடிய ரவைகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட ரவைகள் T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 296 ரவைகள், 12-போர் வகையின் 27 ரவைகள், M-16 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 ரவைகள், T-56 வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரவைகளின் தொகுப்பு, T-56 துப்பாக்கிப் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் 124 பயிற்சி ரவைகள், 9 மிமீ தானியங்கி கைத்துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 365 வெற்று ரவைகள் மற்றும் 24 பயன்படுத்தப்பட்ட T-56 வெற்று ரவைகள் ஆகியவை அடங்கும்.
வீட்டை சோதனை செய்தபோது, சூழ்ச்சுசமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரவைகள் அடங்கிய பொதிகள், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை சீருடைகள், அதற்கான பிரத்தியேக பொருட்கள், காலணிகள், கால்சட்டை, தொப்பிகள் மற்றும் காலில் அணிந்திருந்த துப்பாக்கிக்கான கொள்கலன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனரா.
சந்தேக நபரிடம் மேலும் விசாரித்ததில், வீட்டின் உரிமையாளர் ஒரு பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை வீரர் என்பதும், அவர் தொடர்ந்து இவற்றை வீட்டிற்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளரான சிறப்புப் படை வீரரும் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM