இன்றைய சூழலில் அரசாங்க பணியில் ஈடுபட்டிருந்தாலும், தனியார் துறையில் மாத ஊதியத்திற்காக பணியாற்றி கொண்டிருந்தாலும் செலவுகள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்வதற்கு சிரமப்படுகிறார்கள்.
மாதந்தோறும் பற்றாக்குறை பட்ஜட் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் கவலையடையும் பலருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான வழிபாட்டை மேற்கொண்டால் இதிலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன் செல்வ நிலையையும் முன்னேற்றி கொள்ளலாம் என குறிப்பிடுகிறார்கள்.
முதலில் உங்களுடைய வீட்டிற்கு அருகே இருக்கும் சிவாலயத்திற்க்கோ அல்லது முருகன் ஆலயத்திற்கோ செல்லுங்கள். செவ்வாய்க்கிழமை அல்லது நீங்கள் பிறந்த கிழமையை தெரிவு செய்து முருகப்பெருமானுக்கு நாளாந்தம் ஆறு நெய் தீபங்களை ஏற்றி, முருகன் சன்னதியை பதினோரு முறை வலம் வர வேண்டும்.
இந்த தருணத்தில் உங்களுடைய பிரார்த்தனை 'உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் . இப்படி 48 நாட்கள் தொடர்ச்சியாக பிரார்த்தனையை மேற்கொண்டால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்பாடு அடைவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் இத்தகைய பிரார்த்தனையை மேற்கொள்ளும் 48 நாட்களும் அசைவத்தை முற்றாகத் தவிர்த்து விட்டு, சைவத்தை மட்டுமே பசியாறி, முருக பெருமானை வணங்கி வந்தால் உங்களது செல்வநிலை உயரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM