(எம்.ஆர். எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நிதியியல் நிலையில் நட்டமடைந்த காரணத்தால் தான் நெக்ஸ்ட் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நட்டஈடு வழங்கவும், பிறிதொரு நிறுவனத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவும் தலையீடு செய்வதாக இந்நிறுவனத்தின் நிர்வாக பிரிவு உறுதியளித்துள்ளது என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனுமானத்தில் பேசுவதை போன்று அனுமானத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.நெக்ஸ்ட் கைத்தொழில்சாலை மூடப்பட்டமை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.
பாம்பு நாடகத்தை அரங்கேற்றிய ஊடக உரிமையாளர் இந்த கைத்தொழிற்சாலை மூடப்பட்டதால் வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தனியார் நிறுவனம் மூடப்படும் விவகாரம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி அறிந்தோம். கடந்த 21 ஆம் திகதி நிறுவனத்தின் நிர்வாக தரப்பினர், முதலீட்டு வலய அதிகாரிகள் மற்றும் தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதி நிலையில் பாரிய நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது. இக்காலப்பகுதியில் மாத்திரம் 10 மில்லியன் டொலர் வரையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் அழுத்தத்தினாலும், சேவையாளர்களின் அழுத்தத்தினாலும் இந்த நிறுவனம் மூடப்படவில்லை.
இந்நிறுவனம் மூடப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நேற்று பாராளுமன்றத்தில் முதலை கண்ணீர் வடித்தார்.
2021 ஆம் ஆண்டு அவரது சித்தப்பாவின் ஆட்சியின் போது இந்த நிறுவனத்தின் சேவையாளர்கள் 14 நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை மறந்து விட்டார்.
இதனால் தான் நிறுவனத்தை மூடும் நிறுவனத்தை சேவையாளர்களுக்கு அறிவிப்பதை நிறுவனத்தின் முகாமைத்துவ பிரிவு தாமதப்படுத்தியுள்ளது.
தொழில் வாய்ப்புக்களை இழக்கும் ஊழியர்களுக்கு சேவைகால அடிப்படையில் முறையான நட்டஈடு வழங்கவும், பிறிதொரு நிறுவனத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும் தலையீடு செய்வதாக இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த விடயத்தில் தொழில் அமைச்சு முழுமையாக தலையீடு செய்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM