குவைத்தில் Tvs ஹைதர் குழுமத்தின் வெள்ளிவிழா : வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு 3 கிலோ தங்கம் பரிசளிப்பு! - கவிஞர் பொத்துவில் அஸ்மின் பங்கேற்பு

Published By: Digital Desk 2

23 May, 2025 | 05:32 PM
image

குவைத்தில் முன்னணி வணிகக் குழுமமாக இயங்கிவரும் Tvs ஹைதர் குழுமம், தனது 25வது ஆண்டுவிழாவை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடியது.

முத்துப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் Dr. எஸ்.எம். ஹைதர் அலி தலைமையில் செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பலவித நிகழ்வுகளை நடத்தியது.

150க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் வெள்ளிவிழாவில் 1000 வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.

அதோடு, மூன்று கிலோ தங்கம் ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதோடு, Dr. ஹைதர் அலியின் தனிப்பட்ட நெகிழ்ச்சியான சமூகப் பொறுப்பு உணர்வும் நிகழ்வின் முக்கிய அம்சமாக இருந்தது.

விழாவில் இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

விழாவின் முக்கிய சிறப்பம்சம்களில் ஒன்றாக கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய கவிதையொன்று அரங்கில் வாசிக்கப்பட்டது. உணர்வூட்டும் அந்தக் கவிதை பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து Dr. ஹைதர் அலி அவரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

விழாவினை துபாயை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி  சாரா மற்றும் சேலம் Rj குட்டி பிரகாஸ் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

இரண்டு நாட்களிலும் பிரபல மாயஜால நிபுணர் விக்னேஸின் மாயஜால நிகழ்வு காண்போரை வியக்கவைத்தது.

வணிக வெற்றியுடன் சமூகப் பொறுப்பையும் முன்னெடுத்து வரும் Tvs ஹைதர் குழுமத்துக்கு உலகமெங்கும் 30 கிளைகளை உள்ளன. ஹைதர் குழுமத்தின் இந்த விழா, தொழில்துறையில் சமூகத்தன்மையை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதோடு வளைகுடாவில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இந்நிகழ்வில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் AKS விஜயன், தமிழக காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் அலெக்சாண்டர் IPS, முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முஹம்மது ஜியாவுதீன், ஊடகவியலாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் முக்தார் அஹம்மது, நம் நாட்டின் பிரபல கவிஞரும் தென்னிந்திய தமிழ் சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-06-21 14:49:02
news-image

ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-06-20 13:16:26
news-image

11 ஆவது சர்வதேச யோகா தினம்

2025-06-20 12:45:38
news-image

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்....

2025-06-20 14:02:09
news-image

இலங்கை மனவளக்கலை மன்றத்தின் சர்வதேச யோகா...

2025-06-17 20:09:45
news-image

மன்னார் மருதமடு திருப்பதியில் ஆடி மாத...

2025-06-19 11:19:37
news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29