(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு தாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய குழு கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (22) ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலப்பிட்டி தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.
ஜனநாயக தேசிய கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப்பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும். அரசாங்கம் மக்கள் விரோத செயல்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவினை மீளப்பெறவும் தயங்க மாட்டோம் ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகள் என்பதை விட கொழும்பு மாநகர சபைக்குட்பட்டு வாழும் மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கு தேவை. அதனை அடிப்படையாகக் கொண்டே நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.
வேறு எந்த நிபந்தனைகளையும் நாம் முன்வைக்கவில்லை. கொழும்பு மாநகர சபையில் அரசாங்கம் ஆட்சி அமைத்தால் எம்மால் மக்களுக்கு சேவையாற்ற முடியும்.
எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் அவர்களால் பெரும்பான்மையை பெற முடியாது. கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளுடன் சென்று எம்மால் அமர முடியாது.
எனவேதான் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கின்றோம் என ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபா கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM