(எம்.ஆர். எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளும் போது அதிலும் மோசடி செய்யும் கலாசாரம் தான் கடந்த காலங்களில் காணப்பட்டன. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களில் சுமார் 20ரில்லியன் ரூபா வரையான நிதி நேர்ந்ததென்ன என்பதற்கு முறையான ஆவணங்கள், குறிப்புகள் ஏதும் இல்லை. கணக்காய்வு திணைக்களத்தின் ஊடாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கம் என்ற அடிப்படையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.அரசாங்கம் பிணையாகி அரச நிறுவனங்கள் சர்வதேச பிணைமுறியங்களில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் காணப்படுகின்றன.அத்துடன் நிறுவன கட்டமைப்பின் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
கடன் பெறுகையின் போது வெளிப்படைத்தன்மை மற்றும், முறையான கணக்காய்வு அத்தியாவசியமானது. இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. கடன் பெறுவதை போன்று, கடன் முகாமைத்துவமும் அத்தியாவசியமானது.
கடந்த காலங்களில் எவ்விதமாக வரையறைகளுமில்லாமல் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெற்றுக்கொள்ளப்படும் கடன்களினால் செயற்படுத்தப்படும் கருத்திட்டம் என்ன, அந்த கருத்திட்டத்தால் வினைத்திறனான பிரதிபலன்கள் கிடைக்கப்பெறுமா என்பது முறையாக ஆராயப்படவில்லை. பெற்றுக்கொள்ளப்படும் கடன்களையும் கொள்ளையடிக்கும் கலாச்சாரமே காணப்பட்டது.
2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டளவில் அரச நிதி முகாமைத்துவ காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டு, நிதி விவகாரங்கள் குறித்து புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும். மத்திய வங்கியின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களுக்கு நேர்ந்தது என்னவென்பது இன்று கணக்காய்வாளர் திணைக்களத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு அரசமுறை கடன்களில் சுமார் 20 ரில்லியன் ரூபாய் வரையிலான நிதிக்கு என்னவாயிற்று என்பதற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஏதும் கிடையாது.இவ்விடயம் குறித்து கணக்காய்வு திணைக்களம் ஊடாக விசேட நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும்.
பெற்றுக்கொண்ட அரசமுறை வெளிநாட்டு கடன்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டு கணக்காய்வுக்குட்டு, பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததால் இந்த நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்திருக்காது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM