சர்வதேச நாணய நிதியம் குறித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் விசனம்

23 May, 2025 | 04:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,  இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டில்  திருத்தங்களைச் செய்வோம் எனக் கூறி பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், அந்த ஆணையை இப்போது காட்டிக் கொடுத்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (23) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதைய அரசாங்கம், "வளமான நாடு, அழகான வாழ்க்கை" எனும் கொள்கை பிரகடனம் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு இணக்கப்பாட்டை எட்டுவதன் மூலம் முந்தைய அரசாங்கத்தால் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தைக் குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் சாதகமான இணக்கப்பாடுகள் மூலம் புதிய தோற்றப்பாட்டை அடைய தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்துகிறதா என்பது தற்சமயம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகிறது.

இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன். அரசாங்கத்திடமிருந்து இதற்கான பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

இருதரப்பு கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிணைமுறி கடன் உரிமையாளர்களுக்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் எவ்வளவு?.

குறித்த கடன் செலுத்துதல் ஆரம்பமாகும் வருடத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் தனித் தனியாக செலுத்த வேண்டிய கடன் தவணை தொகை  எவ்வளவு ?

இந்தக் கடன் கொடுப்பனவுகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒரு நாடாக அடைய வேண்டிய பொருளாதார இலக்குகள் அதாவது, பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஏனைய இலக்குகள் உதாரணமாக, அந்நிய செலாவணி இருப்பு நிலைகள், அந்நிய நேரடி முதலீட்டு இலக்குகள் என்ன ?

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதைய அரசாங்கம், "வளமான நாடு, அழகான வாழ்க்கை" எனும் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்ட நாணய நிதியத்துன்  புதிய கடன் நிலைபேறு தன்மை இணக்கப்பாட்டை எட்ட அரசாங்கத்திற்கு ஆணை கிடைத்தது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவ்வாறு இல்லையென்றால், புதிய கடன் நிலைபேறு தன்மை இணக்கப்பாட்டை எட்ட தவறியது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுப்பதாகக் கருதுகிறீர்களா ?

நாணய நிதியத்துடன்  எட்டப்பட்ட இணக்கப்பாடுகளில் நமது நாட்டிற்கு வழங்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின்  கீழ் தவனை தொகைகளை பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய குறிப்பிட்ட நிபந்தனைகளை வேறு வேறாக குறிப்பிடவும் ? மின்சாரக் கட்டணத்தை 18 வீதத்தால்  அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது இதன் பிரகாரமா ?  

விரிவான கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் கடன் தவணைகளின் எண்ணிக்கை யாது ? அந்த ஒவ்வொரு தவணைகளிலும் கிடைக்கப்பெரும் கடன் தொகை எவ்வளவு ?

தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை விட மேலும் சலுகைகளுடன் கூடிய புதிய இணக்கப்பாட்டை எட்டி, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

மேலும், இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இல்லாமல் அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்க முடியாது என்பதால், இதற்கான பதில்களை வழங்காமல் இருக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28