35 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் இளைஞன் கைது!

Published By: Digital Desk 2

23 May, 2025 | 05:01 PM
image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட  35 இலட்சத்து  40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய  பொலிஸ் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யட்டியாந்தோட்டைப் பகுதியில் வசிக்கும் 21 வயதுடையவர் ஆவார்.

விமான நிலைய சோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரின் பயணப்பொதிகளில் இருந்து 20,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் மற்றும் 3,600 "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட பயணியையும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளையும்  வியாழக்கிழமை (23) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28