(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விடை பெறுவதாக இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அவரது 17 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் முடிவுக்கு வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுடனும் கிரிக்கெட் சமூகத்தினருடனும் அவர் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிபூர்வமான தகவலில், தனது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வாய்ப்புக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை ஒரு வீரராகவும் ஒரு நபராகவும் ஆளாக்கிய கிரிக்கெட் வாழ்க்கையையும் நினைவு கூர்ந்தார்.
'நன்றியுணர்வுள்ள இதயத்துடனும் மறக்க முடியாத நினைவுகளுடனும், கிரிக்கெட் விளையாட்டின் மிகவும் நேசத்துக்குரிய வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற வேண்டிய நேரம் இது' என மெத்யூஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
'கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியது எனக்கு கிடைத்த மிக உயர்ந்த மரியாதையும் பெருமையுமாகும்' எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் துடுப்பாட்ட வரிசையில் ஓர் இரும்புத் தூணாக விபரிக்கப்பட்ட மெத்யூஸ், மைதானத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி மரியாதைக்குரிய ஒரு தலைவராகவும் போற்றப்பட்டார்.
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அவரது இறுதி டெஸ்ட் களமாக அமையவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தேர்வுக்கு தயாராக இருப்பதை மெத்யூஸ் உறுதிப்படுத்தினார்.
'நான் கிரிக்கெட்டுக்காக எனது அனைத்தையும் கொடுத்துள்ளேன், அதற்கு பதிலாக கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது' என மெத்யூஸ் மேலும் கூறினார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின்போது முழுமையான ஆதரவை வழங்கிய தனது குடும்பத்தினர், பயிற்றுநர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய டெஸ்ட் குழாம் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்ட மெத்யூஸ், 'மிகத் திறமையான சமகால மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட இது ஒரு மிகச் சிறந்த அணி' என்றார்.
இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் எனவும் அவர் கூறினார்.
கடந்த நான்கு மாதங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறவுள்ள இரண்டாவது இலங்கை வீரர் மெத்யூஸ் ஆவார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன கடந்த பெப்ரவரி மாதம் ஓய்வு பெற்மை அனைவரும் அறிந்ததே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM