கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : நால்வர் கைது!

Published By: Digital Desk 2

23 May, 2025 | 03:15 PM
image

கதிர்காமம் பொலிஸ் பிரிற்குட்பட்ட யால காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

சியம்பலாண்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும்  கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவும் இணைந்து மேற்கொண்ட  05 சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்,  தனமல்வில மற்றும் தெனகம பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 68,830 கஞ்சா செடிகள், 02 சட்ட விரோத உள்நாட்டுத்துப்பாக்கிகள், 02 கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் 02 சிம் அட்டைகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05