வண்ணமயம், பன்முகத்தன்மை கொண்ட “Colourful Harmony” ஓவியக் கண்காட்சி கொழும்பில் நாளை ஆரம்பம்

23 May, 2025 | 12:26 PM
image

“வண்ணமயமான இணக்கம் - Colourful Harmony" எனும் கண்ணைக் கவரும் ஓவியக் கண்காட்சி, பதின்மூன்றாவது தொடராக  கொழும்பில் உள்ள JDA பெரேரா கலைக்கூடத்தில்  நாளை சனிக்கிழமையும் (24) ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ளது.

இந்த கண்கவர் கண்காட்சியில் இலங்கையின் பிரபல ஓவியரும் ஓவிய பயிற்றுவிப்பாளருமான R. கௌசிகனதும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அவரது மாணவர்களின் படைப்புகளும்  இடம்பெறுகின்றன. 

இந்த ஓவிய கண்காட்சியில்  கௌசிகனுடன் இணைந்து ஓவிய மாணவர்களான S. தக்ஷனா சாய், லினிஷா மோகனராஜா, கவினாயா ஸ்ரீஹரன், அன்ரினி பிரியம்பதா தத்தா, ஆஷானி கிரிங், ஜே. செந்தாமரை மற்றும் பியாக்தி தினேஷ் கண்ணா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

அவர்கள் அனைவரும் இணைந்து இயற்கை, வனவிலங்குகளின் அழகு, கருத்தாழம் மிக்க உருவப்படங்கள், ஆன்மிக ஓவியங்கள், மனித உணர்வுகள் முதல் நவீனத்துவ படைப்புகள் வரையான பரந்துபட்ட கருப்பொருள்களை உள்ளடக்கிய சுமார் 112 கலைப்படைப்புகளின் தொகுப்பை இதன்போது வழங்கவுள்ளனர். 

இந்தக் கண்காட்சி பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான உலகிற்கு அழைத்துச்செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த கண்காட்சியில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான பல்வேறுபட்ட கலைப் பாணிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

ஓவியர் R. கௌசிகனைப் பற்றி...

ஆர். கௌசிகனின் கலைப் பயணம் ஏழு வயதில் ஆரம்பமானது. சுயமாக ஓவியக்கலையை கற்றுக்கொண்ட இவர், 1980களில் தமிழ் செய்தித்தாள்களான சிந்தாமணி, தினபதி மற்றும் 1990களில் தினகரன் பத்திரிகைகளில் கார்ட்டூனிஸ்ட் மற்றும் ஓவியராக தனது பணியாற்றியுள்ளார். 

 பல ஆண்டுகளாக, அவரது ஆர்வம் அவரை கேன்வாஸ் ஓவியம், 3D சுவரோவியங்கள், தஞ்சை ஓவியம், கண்ணாடி ஓவியம், உலோக புடைப்பு ஓவியம் மற்றும் டிஜிட்டல் கலை உள்ளிட்ட பல்வேறு பாணிகள் மற்றும் ஊடகங்களை ஆராய வழிவகுத்தது. 

அவரது வாழ்நாள் ஓவிய அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, 2019ஆம் ஆண்டில் இந்து மத மற்றும் கலாசார விவகாரத்துறையின் ‘கலை சுடர்’ அரச விருதை இவர் பெற்றுள்ளார். 

1994ஆம் ஆண்டு முதல் ஓவிய ஆசிரியரான கௌசிகன் தனது மாணவர்களைக் கொண்ட பன்னிரண்டு குழு கண்காட்சிகளை நடத்தியுள்ளார், இதில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தின் சாந்திநிகேதனில் உள்ள சொசைட்டி ஒஃப் விஷுவல் ஆர்ட்ஸ் அண்ட் டிசைனில் (SVAD) நடத்திய COLOURFUL BOND (வண்ணங்களின் பிணைப்பு) எனும் தலைப்பிலான கண்காட்சி மைல்கல்லாகும். அங்கு கௌசிகனும் அவரது மாணவர் ஒருவரும் ஒன்றாகக் கண்காட்சியில் பங்குகொண்ட முதல் இலங்கையர்கள் என்ற பெருமையோடு வரலாறு படைத்தனர். 

இந்த ஆண்டு, இக்கண்காட்சியில் புதிய ஓவியவடிவமாக  Bottle Art (கண்ணாடி போத்தல் ஓவியங்கள்) என்கிற போத்தல் கலையை கண்டுகளிக்கலாம். 

சாதாரண கண்ணாடி போத்தல்கள் புதுவடிவம் பெற்று, கைவினை மற்றும் படைப்பு வடிவமைப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி தனித்துவமான அலங்காரத் துண்டுகளாக மாற்றம் பெற்ற ஓவியங்களாக காட்சிப்படுத்தவுள்ளன.

அத்துடன், பாரம்பரிய கலையுடன்  தொழில்நுட்பமும் கலந்த கலவையான ஒரு புதிய ஓவிய அம்சத்தை, AI (செயற்கை நுண்ணறிவு) உதவியுடன் உருவாக்கப்பட்ட தனது ஓவியங்களை, கேன்வாஸ் ஓவியங்களாகவும், டிஜிட்டல்  ஓவியங்களாகவும் இந்த கண்காட்சியில் கௌசிகன் காட்சிப்படுத்தவுள்ளமை முக்கிய விடயமாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-06-21 14:49:02
news-image

ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-06-20 13:16:26
news-image

11 ஆவது சர்வதேச யோகா தினம்

2025-06-20 12:45:38
news-image

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்....

2025-06-20 14:02:09
news-image

இலங்கை மனவளக்கலை மன்றத்தின் சர்வதேச யோகா...

2025-06-17 20:09:45
news-image

மன்னார் மருதமடு திருப்பதியில் ஆடி மாத...

2025-06-19 11:19:37
news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29