பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம் !

Published By: Digital Desk 2

23 May, 2025 | 12:39 PM
image

ஜனாதிபதி அனுமதி மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் பேரில், இலங்கை பொலிஸ் திணைக்களம் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வருமாறு:

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.கே. கால்லகே, மொனராகலை பிரிவில் இருந்து நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த, கேகாலை பிரிவில் இருந்து தம்புத்தேகம பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன, பொலிஸ் தலைமையகத்தில் இருந்து மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள்...

2026-07-13 12:22:38
news-image

காலி முகத்திடலில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன...

2026-07-13 12:22:28
news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக...

2026-07-13 12:22:14
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19
news-image

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில்...

2026-07-13 09:25:14