பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்க மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் இவ்வாறு விசாரணை குழுக்களை அமைக்குமாக இருந்தால் அதனை முன்மாதிரியாக கொண்டு எதிர்க்கட்சிகளும் முறைப்பாடுகளை செய்து விசாரணை குழுக்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று கூடிய அமர்வின்போது சபைக்கு அறிவிப்பை விடுத்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,
2025.05.20ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் நடந்துக் கொண்ட விதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை கருத்திற்கொண்டு அது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையை முன்வைப்பதற்காக பிரதி குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர்கொண்ட குழு என்னால் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க, சபையில் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடு தொடர்பில் கிடைத்த முறைப்பாடு தொடர்பாக குழுவொன்றை அமைத்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். ஆனால் அந்த குழுவில் எனது பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில் எனக்கு தெளிவு இல்லாமல் இருக்கிறது என்றார்,
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் , நிலையியல் கட்டளை 139 மற்றும் 149 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். ஆகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய கயந்த கருணாதிலக, இதனை முன்மாதிரியாக கொண்டு அரசாங்கத்தினால் இவ்வாறு குழுக்கள் நியமிக்கப்படுவதை போன்று எதிர்க்கட்சியும் எல்லாவற்றுக்கும் முறைப்பாடுகளை செய்ய நேரிடும்.
அதற்காக குழுக்களையும் நியமிக்க நேரிடலாம். அத்துடன் எதிர்க்கட்சியில் குழுக்களுக்காக பிரதிநிதிகளை நியமிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரிடமோ, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலோ ஆலோசிக்குமாறு கோருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM