ஹவார்ட் பல்கலைகழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான திறனை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது.
ஹவார்ட் பல்கலைகழகத்தின் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான திறனை இரத்து செய்துள்ள டிரம்ப் நிர்வாகம் இதன் மூலம் தனது கொள்கைகளிற்கு அடிபணிய மறுக்கும் ஹவார்ட் நிர்வாகத்தினை கடுமையாக தண்டித்துள்ளது.
ஹவார்ட்டினால் இனிமேல் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்க முடியாது,ஏற்கனவே உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் சட்டபூர்வ அந்தஸ்த்தை மாற்றவேண்டும்,அல்லது இழக்கவேண்டும் என அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் வெளிநாட்டு மாணவர்களின் நடத்தைகள் குறித்த பதிவுகளை வழங்குமாறு ஹவார்ட் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது,எனினும் ஹவார்ட் நிர்வாகம் அதனை வழங்க மறுத்துவிட்டது என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவினால் ஹவார்ட்டின் சர்வதேச மாணவர் அமைப்பின் பெருமளவு மாணவர்கள் பாதிக்கப்படலாம்.
இதேவேளை வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது ஒரு சலுகை உரிமை இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் மிகவும் மதிக்கத்தக்கதாக காணப்பட்ட ஹவார்ட் பல்கலைகழகத்தை அதன் தற்போதைய தலைமை அமெரிக்க எதிர்ப்பு யூத எதிர்ப்பின் பயங்கரவாத சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் தளமாக மாற்றிவிட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM