டொனால்ட் டிரம்பின் ஆதரவு இல்லாமலே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கடந்த சில மாதங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா அந்த நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,இஸ்ரேல் அதன் பின்னர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என இஸ்ரேலின் கடும்போக்குவாதிகள் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஒக்டோபரில் ஈரான் இஸ்ரேலை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலைமேற்கொண்ட பின்னர் இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர்பாடல்களை இடைமறித்து கேட்டதன் மூலமும்,இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்ததன் மூலம் இஸ்ரேல் எந்த நேரத்திலும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை நடத்தலாம் என்பது தெரியவந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் அதன் காரணமாக மத்தியகிழக்கில் பரந்துபட்ட மோதல் வெடிக்கலாம். அமெரிக்கா இதனை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணுசக்தி உடன்பாட்டிற்கு வராவிட்டால் ஈரானிற்கு எதிராக இராணுவநடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.கடந்த மாதம் முதல் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
மார்ச் மாதம் டிரம்ப் ஈரானிற்கு 60 நாள் காலக்கெடுவை விதித்தார் அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
பல மாதங்களாக யுரேனியத்தை செறிவூட்டுவதில் ஈடுபட்டுள்ள ஈரான்,தற்போது சிறிய அணுகுண்டை உருவாக்கும் திறனுடன் உள்ளதாக இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM