சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) கூடிய சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன.
இதற்கமைய தலைவர் பதவிக்கு வைத்தியர் நிஹால் அபேசிங்கவின் பெயர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பரால் முன்மொழியப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அதனை வழிமொழிந்தார்.
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM