(எம்.ஆர். எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதியினால் பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீடிப்பதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரை அரசியலமைப்பு பேரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (22) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடியது.
இவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டதுடன், அவரை பதில் கணக்காய்வாளராக அன்றி நிரந்தர கணக்காய்வாளர் நாயமாக பதவி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
எனினும் அரசியலமைப்பு பேரவையின் 6 உறுப்பினர்கள் அவரின் பதவிக் காலத்தை நீடிக்க ஆதரவளித்துள்ளனர். இதற்கமைய பதில் தலைமை கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM