ராஜித , கெஹெலிய, தயாசிறி உள்ளிட்ட 12 பேரின் வங்கிக்கணக்குகளை ஆராய அனுமதி - கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் 

Published By: Vishnu

23 May, 2025 | 03:06 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கை கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர நேற்று  இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் அண்மையில் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

இதற்கமைய குருநாகல் மாவட்ட  உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிஷாந்த, ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளார்கள். 

ஜகத் குமார 10 இலட்சம் ரூபா, குமாரசிறி 9 இலட்சம்,  ஜயலத் ஜயவர்தன 10 இலட்சம்,  நாமல் குணரத்ன 10 இலட்சம்,  தர்மசிறி பண்டா  10 இலட்சம், விதுர விக்கிரமநாயக்க  15 இலட்சம், விமலதீர திசாநாயக்க  30 இலட்சம்,  லகி ஜயவீர  16 இலட்சம்,  சந்திரசேகரன் 14 இலட்சம், ஜோன் அமரதுங்க 40 இலட்சம் என்ற அடிப்படையில்  நிதி பெற்றுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபா, கெஹெலிய ரம்புக்வெல்ல 110  இலட்சம் ரூபா,  டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ,  ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலப்பகுதிகளிலே இந்த ஜனாதிபதி நிதியத்தின் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கமை இந்த விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில்  முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அனுமதி வழங்கினார்.

ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைத்தனர்.

இதன்போது விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான பூரண ஒத்துழைப்பையும் தகவல்களையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரச வங்கிகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் ஜனாதிபதி நிதிய முறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள  36 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 22 பேருக்கு எதிராக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்  அறிக்கைகள் கடந்த மாதம் 30 ஆம் திகதி மன்றில் சமர்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இந்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ள குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சின் செயலாளாருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07