கேள்வி : பிரேத பரி­சோ­த­னை­யின்­போது உடலில் எத்­தனை காயங்கள் இருந்­தன?- 

பதில் : எட்டுக் காயங்கள். 

காயம் 1 :– தலையில் தோலுக்கும் எலும்­புக்கும் இடையில் குருதிப் பெருக்கு 16x 8 செ.மீ. வலப் பகு­தியில் காணப்­பட்­டது. மண்­டை­யோட்டு எலும்பு உள்ளே மூளையில் இரத்தக் கசிவும் மூளை வீங்­கியும் காணப்­பட்­டது. இக்­கா­யங்­க­ளா­னது மொட்­டை­யான விசை­யினால் உரு­வாக்­கப்­பட்­டது. தலை­யா­னது வன்­மை­யான ஒரு பிர­தே­சத்தில் அடிக்­கப்­ப­டும்­போது இது ஏற்­பட்­டி­ருக்கும். இக்­காயம் பொது­வாக உய­ர­மான பிர­தே­சத்­தி­லி­ருந்து கீழே விழு­வ­தன்­மூ­லமே ஏற்­படும். அவ்­வாறு விழும்­போது மண்­டை­யோட்டு எலும்­புகள் உடைந்து காணப்­படும். ஆனால் இங்கு மண்­டை­யோட்டு எலும்­புகள் உடை­ய­வில்லை. எனவே மீண்டும் மீண்டும் ஓரி­டத்தில் தாக்­கப்­பட்­டதால் ஏற்­பட்­டி­ருக்­கலாம். 

காயம் 2 :– தலையின் மேற்­ப­கு­தியில் உச்சிப் பகு­தியில் ஏழுக்கும் மேற்­பட்ட காயங்கள் காணப்­பட்­டன. இவையும் குருதிப் பெருக்கு காயங்­களே. 12X10 செ.மீ. மொட்­டை­யான விசையால் ஏற்­ப­டலாம், கூந்­தலை பல­மாக இழுக்­கும்­போதும் ஏற்­படும். 

காயம் 3 :– இது கண்டல் வகை­யான காயம். 3X3 செ.மீ. அளவில் வலது பக்க கன்னப் பகு­தியில் காணப்­பட்­டது. மொட்­டை­யான விசையால் இறுக்­க­மாக அழுத்தும் போது அல்­லது தாக்­கப்­ப­டும்­போது இத்­த­கைய காயம் ஏற்­ப­டலாம்.

காயம் 4 :– மேல் உதட்டில் உட்­பு­றத்தில் காயம். மொட்­டை­யான விசை­யினால் தாக்­கப்­பட்­ட­மை­யினால் அல்­லது இறுக்­க­மாக அழுத்­தப்­ப­டும்­போது ஏற்­படும். 

காயம் 5 :– உராய்வுக் காயம். கழுத்­தினைச் சுற்றி 35x1 செ.மீ. அளவு. இது கழுத்துப் பட்­டியால் அழுத்­தும்­போது ஏற்­படும் காயத்­திற்கு சம­னா­னது. தசைப் பகு­தியில் கண்டல் காணப்­பட்­டது. கழுத்து எலும்­புகள் முறி­வ­டை­ய­வில்லை. 

காயம் 6 :– கண்டல் வகைக் காயம். இது தோலை வெட்டி பார்த்­த­போது கண்­ட­றி­யப்­பட்­டது. வலது பக்க இடுப்பில் சற்று மேற்­பக்­கத்தில் 18x12 செ.மீ அள­வு­டை­யது. இது வன்­மை­யான பிர­தே­சத்தில் தாக்­கும்­போது அல்­லது மென்­மை­யான தலைப் பகு­தியில் குறித்த பெண்ணின் உடல் இருக்­கும்­போது மேலி­ருந்து விசை பிர­யோ­கிக்­கப்­ப­டும்­போது ஏற்­படும். ஆனால் பிர­யோ­கிக்­கப்­பட்ட விசை இடைத்­த­ரப்பு விசை ஆகும். 

காயம் 7 :– உராய்வுக் காயம் வெளிப்­பு­ற­மாகக் காணப்­பட்­டது. உடலில் இரண்டு பிட்­டங்­க­ளிலும் காணப்­பட்­டது. வலது பக்­கத்தில் 12x7 செ.மீ. இடது பக்கம் 7x5 செ.மீ. அள­வு­டை­யது. 

காயம் 8 :– வலது கால் பகு­தியில் காட்டு முள் ஒன்று குத்தி இருந்­தது. இம்­முள்­ளா­னது காயாத பச்சை முள்­ளாகும். காயத்­தினுள் இம்­முள்­ளா­னது காணப்­பட்­டது. 

மன்றின் கேள்வி : காயம் 6, 7 இவற்­றிற்கு இடை­யி­லான தூரம் எவ்­வ­ளவு?

பதில் : அண்­ண­ள­வாக 6 அங்­குலம். 

கேள்வி : கண் தொடர்­பாக எதனைக் குறிப்­பிட்­டுள்ளீர்? 

பதில் : கண்ணில் உள் மடலில் இரத்தக் கசிவு ஏற்­பட்­டி­ருந்­தது. இடது கண்ணில் வெளிப்­பு­றத்தில் ஒட்­டக்­கூ­டிய தன்­மை­யு­டைய திரவம் ஒன்று காணப்­பட்­டது. கண்ணின் உள் மடலில் ஏற்­பட்ட இரத்தக் கசி­வா­னது பொது­வாக மூச்சுத் திண­ற­லின்­போது ஏற்­படும் மர­ணங்­களில் இது நிகழும். 

கேள்வி : கூந்­தலின் நீளம் எவ்­வ­ளவு?

பதில் : ஒரு மீற்­ற­ருக்கு அண்­மை­யாக (88 செ.மீ)

கேள்வி : வாய் தொடர்­பாக?

பதில் : வாயினுள் பிங் கலர் உள்­ளாடை திணிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி : பல் தொடர்­பாக ?

பதில் : அனைத்துப் பற்­களும் காணப்­பட்­டன.

கேள்வி : உடலில் ஆரம்ப தளர்ச்சி தொடர்­பாக ?

பதில் : உட­லா­னது அழு­கிப்­போகும் நிலைக்கு மாறி­யி­ருந்­தது. 

கேள்வி : இவ் அழுகும் நிலை­யா­னது மர­ணித்து எத்­தனை மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஏற்­பட்­டி­ருக்கும்?

பதில் : 18 மணித்­தி­யா­லங்­களின் பின்

கேள்வி : அப்­ப­டி­யாயின் மரணம் எப்­போது இடம்­பெற்­றி­ருக்கும்?

பதில் : நான் பிரேத பரி­சோ­தனை செய்ய ஆரம்­பித்த நேரத்­தி­லி­ருந்து 18 – 32 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்பு.

மன்றின் கேள்வி – ஏன் விரை­வாக உட­லா­னது அழு­கிப்­போக தொடங்­கு­கி­றது?

பதில் : அது சூழலைப் பொறுத்தே கணிக்­கப்­படும். அந்த வகையில் வெப்­ப­ வ­லய பிர­தே­ச­மாக எமது நாடு இருப்­பதால் இவ்­வா­றான நிலை ஏற்­ப­டு­கி­றது.

கேள்வி : பெண் உறுப்­புத்­தொ­டர்­பாக ? 

பதில் : சில காயங்கள் காணப்­பட்­டன. அவை கன்னி மென்­சவ்வு பல இடங்­களில் கிழிந்தும் பல இடங்­களில் அழி­வ­டைந்தும் இல்­லா­மலும் போயி­ருந்­தது. யோனித்­து­வா­ரத்தின் உட்­ப­கு­தியில் கீழாக 2 செ.மீ. கிழிவுக் காயம் காணப்­பட்­டது. இது செங்­குத்­தாக காணப்­பட்­டது. இக்­கா­ய­மா­னது ஆண்­குறி உட்­செல்­லும்­போது சாதா­ர­ண­மாக ஏற்­படும் காயத்தை விட மோச­மா­னது. அதா­வது சாதா­ரண உட­லு­ற­வுக்கு அப்பால் ஓர் குறு­கிய நேரத்தில் பலரால் பல­முறை ஆண்­குறி உட்­செ­லுத்தப்பட்­ட­மை­யினால் ஏற்­பட்­டது. 

ஒரு ஆண் பெண்ணின் மீது இருந்து உடல் உறவில் ஈடு­ப­டும்­போது விசை­யா­னது கீழ்ப்­ப­கு­தியை நோக்­கித்தான் செல்லும். அந்த வகையில் இக்­கா­ய­மா­னது வன்­மை­யாக பலாத்­கா­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டதால் ஏற்­பட்­டது. ஏற்­க­னவே குறிப்­பி­டப்­பட்ட காயங்­க­ளான 6, 7 ஆகிய காயங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு யோனிப்­ப­கு­தியில் இக்­காயம் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கிய கார­ணத்­திற்கு தொடர்­புகள் உண்டு. அதா­வது பலாத்­கார வன்­பு­ணர்­வின்­போது தலைப்­ப­குதி வன்­மை­யாக தொடர்ந்து மோதும்­போது ஏற்­ப­டக்­கூ­டி­யது. 

கேள்வி : உங்­க­ளது அனு­ப­வத்தின் படி மேற்­படி வித்­தி­யாவின் வயதை உடைய பெண்­க­ளுக்கு இவ்­வா­றான காயங்கள் ஏற்­ப­டுமா?

பதில் : பல பிள்­ளை­களை பெற்­ற­வர்­களை விட சாதா­ர­ண­மாக உள்­ள­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யான காயங்கள்  ஏற்­பட வாய்ப்­பில்லை. இது மிகவும் பாரதூ­ர­மான காயம். 

கேள்வி : நெஞ்சுப் பகுதி தொடர்­பாக?

பதில் : சுவா­சப்பை வீங்­கியும் அதனுள் குருதிக் கலங்கள் தேங்­கியும் சுவா­சப்பை விரி­வ­டைந்தும் காணப்­பட்­டது. இது ஒருவர் மூச்­செ­டுப்­ப­தற்கு கஷ்­டப்­பட்டு திணறல் ஏற்­பட்டு இதயம் செயல் இழக்­கும்­போது  ஏற்­படும். 

கேள்வி : வயிற்­றுப்­ப­குதி தொடர்­பாக?

பதில் : இரப்­பை­யினுள் 100 மி.லீ. அள­வு­டைய மஞ்சள் நிற­மான தேநீரை ஒத்த திரவம் காணப்­பட்­டது. அதில் மது­சாரம், நஞ்சு கலந்து காணப்­ப­ட­வில்லை. 

கேள்வி : தேநீர் ஜீர­ண­மாக எவ்­வ­ளவு நேரம் தேவை?

பதில் : பொது­வாக உணவு 4 – 6 மணி நேரத்தில் ஜீர­ண­மாகும். 

கேள்வி : அப்­ப­டி­யாயின் தேநீர் அருந்தி எவ்­வ­ளவு நேரத்தில் இறப்பு இடம்­பெற்­றது?-

பதில் : இரண்டு மணி நேரத்­திற்குள். 

கேள்வி : குறித்த பெண்ணின் மர­ணத்­திற்­கான காரணம் என்ன?

பதில் : இதற்கு மூன்று கார­ணங்கள் உண்டு. அதா­வது தலையில் ஏற்­பட்ட காயத்தால் குரு­திப்­பெ­ருக்­கா­னது ஏற்­பட்­டி­ருந்­தமை, கழுத்­துப்­ப­கு­தி­யா­னது பாட­சாலை கழுத்­துப்­பட்­டியால் இறுக்கி நெரிக்­கப்­பட்­டி­ருந்­தமை மற்றும் உள்­ளாடை வாயினுள் திணிக்­கப்­பட்ட நிலையில் அது தொண்டைப் பகு­தியில் அடைத்­தமை ஆகிய மூன்று கார­ணங்­க­ளா­லுமே இறப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. 

கேள்வி : பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் உங்­க­ளது குறிப்பு என்­பதில் எதனைக் குறிப்­பிட்­டுள்ளீர் ?

பதில் : உடலில் அவரை பிடித்து அழுத்­திப்­பி­டித்த சான்­றுகள் உள்­ளன. கை, கால் கட்­டப்­பட்டும் கன்­னப்­ப­கு­தியில் காயம் ஏற்­பட்­டி­ருந்­தது. பின்­ப­கு­தியில் கண்­டல் ­கா­யங்கள் ஏற்­பட்­டி­ருந்­த­மையை சேர்த்­துப்­பார்க்­கின்­ற­போது  இதற்­கான சான்­றுகள் தெளி­வாக உள்­ளன. மேலும் யோனிப்­ப­கு­தியில் ஆண்­கு­றி­யா­னது செலுத்­தப்­பட்ட சான்­றுகள் தெளி­வாக உள்­ளன. 

உடலில் ஏற்­பட்­டி­ருந்த காயங்­களை தொகுத்துப் பார்க்­கின்­ற­போது கழுத்து, தலை, வாய் ஆகிய பகு­தி­களில் ஏற்­பட்­டி­ருந்த காயங்கள் தனித்­த­னி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய காயங்கள் ஆகும். 

கேள்வி : தலைப்­ப­கு­தியில் ஏற்­பட்ட காயம் உட­ன­டி­யாக மர­ணத்தை ஏற்­ப­டுத்­துமா?

பதில் : குறிப்­பிட்ட நேரத்தை கூற­மு­டி­யாது. அது மூளையில் ஏற்­பட்ட தாக்­கமும் இரத்­தப்­பெ­ருக்கின் அளவைப் பொறுத்­துமே கூற­மு­டியும். 

மன்றின் கேள்வி : தலையில் ஏற்­பட்ட காயத்­திற்கு உட­ன­டி­யாக சிகிச்சை வழங்­கப்­பட்டால் உயிரை காப்­பாற்­றி­யி­ருக்க முடி­யுமா?

பதில் : இது சாதா­ர­ண­மாக சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு அகற்­றிட முடி­யாது. மூளையின் பல பாகங்­க­ளுடன் தொடர்புபட்­டது. மருந்­து­க­ளையும் கொடுத்து முயற்­சித்துப் பார்க்­கலாம். ஆனால் நிச்­ச­ய­மில்லை.  

கேள்வி : வாய்க்குள் துணி அடை­வதால் மரணம் ஏற்­ப­டுமா?

பதில் : வாயில் இருந்து உமிழ் நீர் சுரக்­கும்­போது வாய்க்குள் திணிக்­கப்­பட்ட துணியை நனைப்­பதால் அத்துணி பார­ம­டைந்து தானாக தொண்­டைக்­குள்­சென்று சுவா­சத்தை அடைத்தால் மரணம் ஏற்­படும். குறித்த இப்­பெண்ணின் பிரேத பரி­சோ­த­னையின் போது அவ­ரது வாய்க்குள் திணிக்­கப்­பட்­டி­ருந்த உள்­ளாடை அவ­ரது தொண்­டை­வரை சென்று இறு­கி­யி­ருந்­தது. 

மன்றின் கேள்வி : வாய்க்குள் துணி அடைக்­கப்­பட்டும் கழுத்து இறுக்­கப்­ப­டு­வதும் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் எவ்­வ­ளவு நேரத்தில் மரணம் ஏற்­படும். 

பதில் : சில நிமி­டங்­களில். 

கேள்வி : குறித்த சட­லத்தின் வேறு பகு­தி­களில் விந்­த­ணுக்கள் ஏதேனும் எடுக்­கப்­பட்­டதா? 

பதில் : சடலம் கண்­டெ­டுக்­கப்­பட்ட அன்றும் அதற்கு முன்பும் மழை பெய்­தி­ருந்­ததால் உடலில் இருந்த விந்­த­ணுக்கள் மழை நீரில் கழுவி செல்­லப்­பட்­டி­ருக்­கலாம். 

கேள்வி : சட­லத்தில் மொய்த்த எறும்­பு­களால் விந்­த­ணுக்கள் அழிக்­கப்­பட்­டி­ருக்க முடி­யுமா?

பதில் : சட­லத்தில் எறும்­புகள் காணப்­பட்­டி­ருந்­தன. விந்­த­ணுக்­களில் இனிப்­புக்கள் அதி­க­மாக இருப்­பதால் அவற்றை எறும்புகள் கவர்ந்திருக்கலாம். 

கேள்வி : சடலம் கட்டிப்போடப்பட்டிருந்த இடத்தில் வல்லுறவு இடம்பெற்றிருந்ததற்கான சான்றுகள் ஏதேனும் காணப்பட்டதா?

பதில் : அது அவ்வாறு இடம்பெற்றிருக்க  சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் மீண்டும் மீண்டும் வல்லுறவு இடம்பெறும்போது அவ்விடத்தில் இருந்த மரங்களில் இருந்து வீழ்ந்த இலைகுழைகளில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஸ்தலத்தில் அவதானித்தபோது யோனிமடலுக்கு கீழாக நான்கு அடிவரை அங்கு காணப்பட்ட இலைகுழைகளில் மாற்றங்கள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை. அத்துடன் நான் கூறிய காயங்கள் அவ்வாறான ஒரு காய்ந்த இலைகுழைகள் நிறைந்த மெத்தைபோன்று மென்மையான இடத்தில் ஏற்பட்டிருக்காது. எனவே இதனை வைத்து அவ்விடத்தில் வல்லுறவு இடம்பெறவில்லை எனக் கூறமுடியும். 

இதேவேளை குறித்த பெண்ணின் வாயினுள் இருந்து எடுக்கப்பட்ட உள்ளாடையானது ஜீன்டெக் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு மன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதனை நேற்று சட்ட வைத்திய நிபுணர் அடையாளம் காட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த உள்ளாடையானது சான்றுப்பொருள் வ.20 என அடையாளம் இடப்பட்டது. 

அதேபோன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றின் இவ்வழக்குத்தொடர்பாக காணப்படும் மூல வழக்கேட்டில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கையை பிரித்தெடுத்து மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கேட்டில் சான்றுப்பொருள் வ.21 என இணைக்குமாறும் இதனை உறுதிப்படுத்தி அதனை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்புமாறும் மன்றானது ட்ரயல் அட்பார் நீதிமன்ற பதிவாளர்களுக்கு  உத்தரவிட்டது.

வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள் - பகுதி 01

வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள் - பகுதி 02