உப்புத் தட்டுப்பாட்டுக்கு காலநிலையே காரணம் பைசல் மொஹமட் எம்.பி

Published By: Vishnu

23 May, 2025 | 12:31 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,  இராஜதுரை ஹஷான்)

நாட்டில் உப்பு தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் காரணமில்லை.  காலநிலையே காரணமாகும். காலநிலைக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் சம்பந்தம் இல்லை.  என்றாலும்  தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த  அரசாங்கம் உப்பு இறக்குமதி செய்து மக்களுக்கு  விநியோகிக்க நடவடிக்கை  எடுத்திருக்கிறதென தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பைசல் மொஹமட் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி(கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம்தான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். உப்பு  தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் காரணமில்லை. உப்பு இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

 நீர், காற்று, வெப்பத்தின் ஊடாகவே உப்பு உற்பத்தியாகிறது. என்றாலும்  நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகவே உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலநிலைக்கும்  தேசிய மக்கள் சக்திக்கும்  சம்பந்தம் இல்லை.

அதேநேரம் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு  தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுத்திருக்கிறது. உப்பு  இறக்குமதிசெய்து விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று  உப்பு  உற்பத்தி செய்யப்படும் புத்தளத்துக்கு  வந்த அமைச்சர் சுனில் ஹந்தன்னெத்தி, அங்குள்ள  குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைை எடுப்பதாக  தெரிவித்தார்.

அதனால் எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல் உப்பு தட்டுப்பாட்டுக்கு  அரசாங்கம்  காரணமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் இனிமேல் உப்பு தட்டுப்பாடு தொடர்பில் கதைப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் இடம்பெற்று  முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புத்தளம் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றியை வழங்கி இருக்கிறது. புத்தளத்தில் அதிகமான மன்றங்களை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால்  எதிர்க்கட்சியினர் இந்த தேர்தலில் பாரியளவில்  பணம்  கொடுத்தும்  கல்ல வாக்கு போட்டுமே வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.

பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்  இவ்வாறு  திருட்டுத்தனமாக வாக்களிக்க சென்று பாெலிஸாரால் கைதுசெய்யப்பட்டு,  7 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறுதான் இவர்கள் பணம்  மற்றும்  வேறு  பொருட்களை மக்களுக்கு  விநியோகித்தே வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள்..

கல்பிடடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க ஆளும் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகவும் அதற்காக  25இலட்சம் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுத்துவருவதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசாங்கத்தில் யாரும் யாரையும் பணம் கொடுத்து வாங்க முற்படவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு பல இலட்சம் ரூபா கொடுத்து உறுப்பினர்களை விலைக்குவாங்க முயற்சித்து  வருகின்றனர்.

அதேபோன்று  புத்தளம் மன்னார் வீதியை மூடிவிட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, எமது அரசாங்கத்தின் மீது குற்றம் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர் உரையாற்றி இருந்தார். ஆனால்  குறித்த உறுப்பினர்  22 வருடங்களாக இந்த சபையில் இருக்கிறார்.

அதேபோன்று  அமைச்சரவை அமைச்சராக  பல தடவைகள் இருந்து வந்துள்ளார். அப்போது இந்த  பாதையை திறப்பதற்கு எந்த  நடவடிக்கையும் எடுக்காமல்  தற்போது எமது அரசாங்கத்தை குறைகூறி வருகிறார். ஆனால் புத்தளம் மன்னார்  வீதியை  இந்த வருடத்துக்குள் திறப்பதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55