தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையாகப் போராட உசெய்த் உறுதி; இறுதிப் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள் மூவர்

Published By: Vishnu

22 May, 2025 | 08:50 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில்  தங்கப் பதக்கத்தை   வென்றெடுக்க என்ன விலை கொடுத்தேனும் கடுமையாக போராடுவேன் என இலங்கை குத்துச்சண்டை சம்பியன் யஸ்மின் மொஹமத் உசெய்த் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ASBC ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கை சார்பாக பங்குபற்றும் 33 வீர, வீராங்கனைகளில் தங்கப் பதக்கம் வெல்லக்கூடியவர் என நம்பப்படுபவர் உசெய்த் ஆவார்.

வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள 22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் கொன்சிபெக்கொவ் அமானை உசெய்த் எதிர்த்து போராடவுள்ளார்.

இறுதிப் போட்டியில் உங்களால் சாதிக்க முடியுமா என உசெய்த்திடம் கேட்டபோது,

'ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள். வெறுமனே வெள்ளிப் பதக்கத்திற்காக போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல. இந்தக் குத்துச்சண்டை போட்டி இலங்கையில் நடைபெறப் போகிறது என கேள்விப்பட்ட நாளிலிருந்து நான் கடுமையாக பயிற்சி செய்துவந்தேன். அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் ஆப்த்ரக்மனோவ் டெனியலை 3 - 0 என்ற சுற்றுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதன் மூலம் நான் உற்சாகம் அடைந்துள்ளேன். அத்துடன் எனது நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே நான் கடுமையாக போராடி வெற்றிபெற்று தங்கத்தை சுவீகரிப்பேன்'  என பதிலளித்தார்.

ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்ற ஒரே ஒரு இலங்கையர் உசெய்த் ஆவார்.

அரை இறுதிப் போட்டியில் வேகம், விவேகம், சிறந்த நுட்பத்திறன் அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து உசெய்த் தொடுத்த கடூரமான தாக்குதல்களுக்கு கஸக்ஸ்தான் வீரரினால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இதேவேளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள் மூவர் பங்குபற்றவுள்ளனர்.

22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவில் மஞ்சரி சந்துனிக்கா நரசிங்க, 63 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஹன்சனி நாயக்கரத்ன, 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் என். என். தருஷிக்கா ஆகியோர் இறுதிப் போட்டிகளில் மோதவுள்ளனர்.

பொட்டிகளுக்கான குலுக்கலின்போது நேரடியாக இறுதிப் போட்டிகளில் பங்குபற்றும் அதிர்ஷ்டத்தைப் பெற்ற இந்த 3 வீராங்கனைகளும் முழுப் பலத்தையும் பிரயோகித்து இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற முயற்சிப்பதாக தெரிவித்தனர்.

ஆசிய குத்துச்சண்டை சம்பயின்ஷிப் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் நாளை வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள கடைசி இறுதிப் போட்டிகளுடன் நிறைவடையவுள்ளது.

நாளை மாலை நடைபெறவுள்ள பரிசளிப்பு வைபவத்தின்போது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஓட்டுமொத்த சம்பியனாகும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் அதிசிறந்த குத்துச்சண்டை வீரர், அதிசிறந்த குத்துச்சண்டை வீராங்கனை ஆயோருக்கு விசேட விருதுகளும் வழங்கப்படும்.

இப் போட்டிகளில் இருபாலாரிலும் பங்குபற்றிவரும் இலங்கை, நேற்றுவரை ஒரு வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்துள்ளது. இலங்கைக்கு மேலும் 4 பதக்கங்கள் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று  கிடைக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00
news-image

கடைசி ஒருநாள்  போட்டியில்  சாமிக்க அபாரம்,...

2026-07-09 23:55:06
news-image

மீண்டும் ஒரு உலகக் கிண்ண நொக்...

2026-07-09 15:54:14
news-image

டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் அசித்த பெர்னாண்டோ,...

2026-07-08 22:49:01
news-image

ஐசிசி இணை உறுப்பு நாடுகள் பணிப்பாளர்களாக...

2026-07-08 22:06:14
news-image

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் இந்தியாவுக்கு...

2026-07-08 17:29:14
news-image

கொலம்பியாவை பெனல்டிகளில் வென்ற சுவிட்ஸர்லாந்து 72...

2026-07-08 14:14:11
news-image

இரண்டாவது டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு; தொடரைக்...

2026-07-08 14:42:55
news-image

உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம்...

2026-07-08 04:39:12