அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்படுத்தல் குறித்து அமைச்சு செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

Published By: Vishnu

22 May, 2025 | 08:07 PM
image

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (22) ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார  மூலோபாயங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவது குறித்து  இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவை நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்தும் ஆரயாயப்பட்டது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும் அமைச்சின் செயலாளர்களுடன் பரவலாகக் கலந்துரையாடப்பட்டது.  

அரச  சேவைகளை மேலும்செயற்திறனுடன் முன்னெடுப்பதற்கும், வீண்விரயம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவது குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு  இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான  சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37