டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிதியியல் சேவைகள் கொத்தணியின் பிரதான நிறுவனமான அசெட்லைன் ஃபினான்ஸ் லிமிட்டெட், Lanka Rating Agency (LRA) இடமிருந்து A- Stable Outlook (உறுதியான நோக்கு) என்ற முன்னைய கடன் தர மதிப்பீட்டிலிருந்து, A Positive Outlook (நேர்மறையான நோக்கு) என்ற மேம்படுத்தப்பட்ட நிறுவன கடன் தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மேம்பட்ட நோக்குடன் இணைந்த அதன் தர மதிப்பீட்டு மேம்பாடு, அசெட்லைன் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் வலுவான நிதி மூலாதாரங்கள், நிலைபேறான வளர்ச்சிப் பயணம் மற்றும் அதன் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் செயல்திறன் தொடர்பில் சந்தையில் அதிகரித்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த புதிய கடன் தர மதிப்பீடு, நிறுவனத்தின் விவேகமான நிதி முகாமைத்துவத்தில் அதன் உறுதியான அர்ப்பணிப்பு, சிறந்த இடர் முகாமைத்துவ நடைமுறைகளில் வலுவான கவனம் மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கான ஒரு மூலோபாய அணுகுமுறை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டில், ரூபா 50 பில்லியனைத் தாண்டியவாறு நிறுவனம் தனது சொத்து தளத்தில் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், தொழில்துறையில் அதன் வலுவான ஸ்தானத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மூலோபாய ரீதியான முதலீடுகள் மற்றும் மூலதன முகாமைத்துவத்திற்கான ஒழுக்கமான அணுகுமுறை ஆகியனவே இந்த வளர்ச்சிக்கான உந்துசக்தியாக காணப்பட்டது. இது நிறுவனத்தின் பணப்புழக்கம் மற்றும் நிதியியல் ஸ்தானத்தை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளது. அசெட்லைன் ஃபினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின்செயல்பாட்டுத் திறனையும் நீண்டகால அடிப்படையில் பங்குதாரர் மதிப்பைத் தோற்றுவிக்கும் அதன் திறனையும் இது தெளிவாகக் காண்பிக்கிறது.
திரு. அஷான் நிசங்க (பணிப்பாளர் மற்றும் பிரதம நிர்வாக அதிகாரி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM