எம்மில் பலரும் நாளாந்தம் கடுமையாக உழைத்து தின கூலியை பெற்று வருவர். இவர்களும் குடும்ப செலவுகளுக்கு போக சிறிதளவாவது சேமித்திட வேண்டும் என கனவு காண்பர். ஆனால் அவர்களுடைய கனவு ஒரு போதும் நனவாவதில்லை. ஏனென்றால் எப்போதும் பற்றாக்குறையாக தான் நாளை கடத்த வேண்டியதாக இருக்கும்.
இந்த தருணத்தில் நீங்கள் தன வரவை அதிகரிப்பதற்கு தான் முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்குவீர்கள். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இதனை அவர்கள் தொடர்ந்து பின்பற்றும் போது அவர்களுடைய செல்வ நிலை உயர்வதைக் காணலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் : மண்ணாலான பானை அல்லது கலசம், பச்சரிசி, ஐந்து ரூபாய் நாணயங்கள்.
உங்களது பிறந்த கிழமை, ஜென்ம நட்சத்திரம், ஆகிய தினங்களில் சந்தையில் இருந்து சிறிய அளவிலான அல்லது கலச வடிவிலான மண் பானையை வாங்கி வாருங்கள். அதனுடன் பச்சரிசி மற்றும் ஆறு ஐந்து ரூபாய் புதிய நாணயங்களை வைத்திருங்கள். மேலே குறிப்பிடப்பட்ட நாளில் மண்பானையில் பச்சரிசியை நிரப்பி அதனுள் ஆறு ஐந்து ரூபாய் நாணயங்களையும் வைத்து மறைத்திட வேண்டும்.
இந்த பச்சரிசி உடன் கூடிய மண்பானையை உங்களுடைய பூஜை அறையில் இடம் பெறச் செய்யுங்கள். நாளாந்தம் ஏனைய இறைவனின் திரு உருவ புகைப்படங்களுக்கு அலங்காரம் செய்து வணங்குவது போல் இந்த மண்பானையையும் வணங்குங்கள்.
மாதம் ஒரு முறை அந்த மண் பானையில் இருக்கும் அரிசியை மாற்றி விட வேண்டும். அதில் இருக்கும் ஆறு ஐந்து ரூபாய் நாணயங்களை தனியாக உண்டியலில் சேகரித்து வர வேண்டும் . ஒரு ஆண்டிற்கு பிறகு உங்களுடைய செல்வ நிலை உங்களையும் அறியாமல் உயர்ந்திருப்பதை பார்த்து வியப்படைவீர்கள்.
மண்பானையில் இருந்து மாற்றப்பட்ட பச்சரிசியை எறும்புகளுக்கு உணவாக வழங்கலாம். சேகரித்த ஐந்து ரூபாய் நாணயங்களை குலதெய்வ ஆலய காணிக்கை உண்டியலில் செலுத்தலாம். இதனை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது படிப்படியாக உங்களது செல்வநிலை உயர்வதை கண்டு மகிழ்வீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM