மோகன்லால் நடிக்கும் ' விருஷபா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

22 May, 2025 | 04:02 PM
image

மலையாள திரையுலகின் சுப்பர் ஸ்டாரும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ' விருஷபா ' படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் நந்த கிஷோர் எழுதி, இயக்கி வரும் 'விருஷபா' படத்தில் மோகன்லால் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏராளமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் 'விருஷபா ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் கம்பீரமாக தோற்றமளிப்பதால் அவருடைய ரசிகர்களிடத்தில் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்