உலக அழகு ராணி போட்டியில் இருந்து பிரித்தானிய அழகு ராணி  திடீர் விலகல்

Published By: Digital Desk 3

22 May, 2025 | 04:10 PM
image

இந்தியாவின், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி போட்டி இடம்பெற்று வருகிறது. 

இதில் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் பங்கேற்றுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் அழகு ராணிகள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இறுதிப்போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து “மில்லா மாகி” என்ற அழகு ராணி  உலக அழகு ராணிப்போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் ஆர்வமாக பங்கேற்ற இவர், திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 

தெலுங்கானாவில் வெப்பம் அதிகரித்து வருவதால், அவர் சோர்வடைந்ததாக தெரிகிறது. இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் பிரித்தானியாவுக்கே திரும்பி சென்று விட்டார்.

உலக அழகு ராணி திறமைக்கான போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள், உலக அழகு ராணி திறமைக்கான இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல்...

2025-06-22 11:23:20
news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49
news-image

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்படவில்லை...

2025-06-20 15:23:30