எம்முடைய இளைய தலைமுறையினர் வைத்தியர்களை சந்தித்து உரையாடும்போது டயபட்டிக் ரிவர்ஸ் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்கிறார்கள். அதற்கு வைத்தியர்களும் விளக்கம் தருகிறார்கள். இதைத் தொடர்ந்து பலரும் நரம்புகள் சேதமடைந்தால் அதனை ரிவர்ஸ் செய்ய இயலுமா? அதாவது சேதமடைந்த நரம்புகளை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்க இயலுமா? என கேட்கிறார்கள். இதற்கு வைத்தியம் நிபுணர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.
மூளையில் உள்ள செல்கள், நரம்புகள் மற்றும் தண்டு வடத்தில் உள்ள செல்கள், நரம்புகள் ஆகியவை சேதமடைந்தால் அதனை ஒருபோதும் மீட்க இயலாது. அதாவது மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திருப்ப இயலாது. இதனால் தான் வைத்தியர்கள் இதற்குரிய அறிகுறிகள் தென்படும் தருணத்திலேயே விரைவாக வைத்தியர்களை சந்தித்து முறையான சிகிச்சையை பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
கால் மதமதப்பு அல்லது மரத்துப்போதல், கால்களில் குறிப்பிட்ட பகுதியில் உணர்வின்மை, திடீரென்று குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் போல் ஒரு துடிப்பு ஏற்பட்டு மறைதல், சில தருணங்களில் கை மற்றும் கால்களில் குறிப்பிட்ட பகுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலை ஏற்பட்டால் அந்தப் பகுதிகளில் உள்ள நரம்புகள் முழுமையாக சேதம் அடைந்திருக்கிறது என பொருள் கொள்ளலாம்.
நரம்புகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் அதனை எந்தவித சிகிச்சை மூலமாகவும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலாது. குறிப்பாக தலை மற்றும் தண்டுவட பகுதியில் உள்ள செல்கள் நரம்புகள் சேதமடைந்தால் அதனை புதுப்பிப்பதற்கான சிகிச்சைகள் இல்லை.
அத்துடன் மரத்து போதல் என்ற தொடக்கநிலை அறிகுறி ஏற்பட்டவுடன் உடனடியாக அருகில் இருக்கும் வைத்திய நிபுணர்களை சந்தித்தால் அவர்கள் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதற்கான நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள். மேலும் இத்தகைய தருணத்தில் அவர்கள் இயன்முறை சிகிச்சை - உடற்பயிற்சி- நடைப்பயிற்சி - உணவு கட்டுப்பாடு - ஆகியவற்றை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். அவரது பரிந்துரையை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் நரம்பு மேலும் சேதமடையாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM