நடிகர் முகேன் ராவ் நடிக்கும் 'ஜின்- தி பெட் ' படத்தின் இசை, முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

22 May, 2025 | 03:58 PM
image

நடிகர் முகேன் ராவ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜின் -தி பெட்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் தமிழ் திரையுலக பிரபலங்கள் அதிதியாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ' ஜின் - தி பெட் ' எனும் திரைப்படத்தில் முகேன் ராவ் , பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, வடிவுக்கரசி ,பால சரவணன், வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய், ரித்விக் , இமான் அண்ணாச்சி , நந்து ஆனந்த் என ஏராளமான நட்சத்திர கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். கொமடி ஹாரர் வித் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேரிடேல் பிக்சர்ஸ் மற்றும் ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' மலேசியாவில் எம்முடைய உறவினர் வீட்டில் ஜின் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறது. இதை அவர்கள் தெரிவித்த உடன் ஜின் குறித்த ஆர்வம் அதிகமானது. அதிலும் ஜின்னை வளர்ப்பதற்கான நிபந்தனைகளை கேள்விப்பட்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. அது தொடர்பான தேடலில் ஈடுபட்ட போது.. இந்த ஜின்னை மையமாக வைத்து கொமடி ஹாரர் ஜேனரிலான கதை, திரைக்கதையை எழுதினேன். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கும் பொழுது போக்கு நகைச்சுவை சித்திரமாக உருவாகி இருக்கிறது. '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்