'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என போற்றப்படும் மறைந்த இந்திய குடியரசு தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, 'கலாம்' எனும் பெயரில் திரைப்படமாக தயாராகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
பொலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் 'கலாம் 'எனும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் கேன்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் முன்னேறும் இளைஞர்களுக்கான முன்னுதாரண புருஷராக திகழும் ஏ பி ஜே அப்துல் கலாம் பற்றிய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதி பவன் வரையிலான அப்துல் கலாமின் வாழ்க்கை பயணத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களை தொகுத்து தயாராகும் திரைப்படமாக உருவாகிறது.
விண்வெளி விஞ்ஞானி - மக்களின் ஜனாதிபதி- இந்தியாவின் ஏவுகணை நாயகன்- இந்திய ரொக்கட் அறிவியலின் தந்தை- எளிமையான மனிதர்- 'கனவு காணுங்கள் ' என வாழ்க்கைக்கான புதிய சிந்தனையை விதைத்தவர்- எழுத்தாளர்- என பன்முக ஆளுமை திறன் மிக்க அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு.. உத்தியோகபூர்வமான திரைப்படமாக உருவாகிறது.
இப்படத்தில் பங்கு பற்றி பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் முன்னணி வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் - டீ சீரிஸ்- இயக்குநர் ஓம் ராவத்- சர்வதேச நட்சத்திர நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலே சர்வதேச சினிமா பார்வையாளர்களிடத்தில் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே நடிகர் தனுஷ் ஏற்கனவே இசைஞானி இளையராஜாவின் சுயசரிதையில், இசைஞானியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM