தக்ஸ் லைஃப்'பின் 'சுகர் பேபி'

Published By: Digital Desk 2

22 May, 2025 | 03:50 PM
image

நாற்பது வயதை கடந்த பிறகும் இளமை குன்றா பேரழகி நடிகை திரிஷா திரையில் வெள்ளுடை தேவதையாக தோன்றும் 'சுகர் பேபி' எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மானின் வசீகரிக்கும் மெட்டில் உருவான 'என்ன வேணும் உனக்கு கொட்டிக் கொட்டி கிடக்கு..' என தொடங்கும் பாடலை பாடலாசிரியர்கள் சிவா ஆனந்த் - இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இணைந்து எழுத, பின்னணி பாடகிகள் அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுபா,சரத் சந்தோஷ், ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் - மெட்ராஸ் டாக்கீஸ் - ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ' தக்ஸ் லைஃப் ' எனும் திரைப்படத்தில் கமல்ஹாசன் , திரிஷா,  சிலம்பரசன்,  ஐஸ்வர்ய லட்சுமி,  அசோக் செல்வன், அபிராமி, ஜோஜூ ஜோர்ஜ்,  நாசர், பொலிவுட் நடிகர்கள் மகேஷ் மஞ்சரேக்கர், அலி ஃபைசல் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் 'தக்ஸ் லைஃப் ' படத்தினை இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக பங்கு பற்றி வருகிறார்கள்.

'தக்ஸ் லைஃப் ' படத்தின் டீசர், ட்ரெய்லர், முத்த காட்சிகள், எக்சன் காட்சிகள் ,ட்டம் சாங், திரிஷாவின் கவர்ச்சியான நடனம், என படத்தில் இடம் பிடித்திருக்கும் வணிக அம்சங்கள் வெளியீட்டிற்கு முன்பாக முதன்மைப்படுத்தப்பட்டு வருவதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்