பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Published By: Digital Desk 3

22 May, 2025 | 03:29 PM
image

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. 

இதற்கு போட்டியாக, தனது வான்எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.

இதையடுத்து பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சு வார்த்தைக்குப் பின்பு அடங்கி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வான்எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான்  புதன்கிழமை (21)  அறிவித்துள்ளது. 

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ.) விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23 ஆம் திகதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்த தடையை நீடித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32...

2026-06-08 21:53:09
news-image

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை...

2026-06-08 15:15:56
news-image

மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர்...

2026-06-08 14:33:17
news-image

செஸ் சம்பியன் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய...

2026-06-08 14:14:15
news-image

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் : உயிரிழப்பு எண்ணிக்கை...

2026-06-08 13:16:59
news-image

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் :...

2026-06-08 10:21:25
news-image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சர்வதேச விமான...

2026-06-08 09:43:29
news-image

நியூயோர்க் பென் ரயில் நிலையத்தில் கத்திக்குத்துத்...

2026-06-08 08:17:29
news-image

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்;...

2026-06-08 07:30:27
news-image

தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான்...

2026-06-07 20:52:04
news-image

திறந்தவெளி திருப்பலியில் பாப்பரசரை காண ஸ்பெயின்...

2026-06-07 17:48:13
news-image

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு...

2026-06-07 12:40:35