உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “பிரம்ம கமலம் -2025” நிகழ்வு இணையவழியினூடாக இன்று வியாழக்கிழமை (22) மாலை 7 மணிக்கு (இலங்கை நேரப்படி) நடைபெறவுள்ளது.
புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் “பத்மபூஷண்” பேராசிரியர் C.V சந்திரசேகரின் நினைவாக உருவாக்கப்பட்ட உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கமும் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியும் இணைந்து இம்முறை C.V சந்திரசேகரின் 90ஆவது பிறந்த தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் பிரம்ம கமலம் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.
எழுத்தாளரும் நடன அமைப்பாளரும் நடனப் பயிற்சியாளருமான “கலைமாமணி” லீலா சாம்சனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் “ஞானபாநு” ராஜ்குமார் பாரதி தொடக்க உரையாற்றவுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM