ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம் - உலக நாடுகள் கடும் கண்டனம்

22 May, 2025 | 12:33 PM
image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில்இராஜதந்திரிகள் குழுவினரை  நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு  பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தஇராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது.

அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள  இஸ்ரேலிய இராணுவம்இஅவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை நோக்கியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச இராஜதந்திரிகளிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் விசாரணைகளின் பின்னர் இராஜதந்திரிகளை தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது

இஸ்ரேலிய இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகக்கு ஸ்பெயின்எகிப்து பிரான்ஸ் அயர்லாந்து இத்தாலி ஆகிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய தூதுவர்களை அழைத்து தங்கள் கண்டனங்களை வெளியிடப்போவதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் விளக்கமளிக்கவேண்டும் என பலநாடுகள் தெரிவித்துள்ளன.

இராஜதந்திரிகள் குழுவை இஸ்ரேலிய படையினர் வேண்டுமென்றே இலக்குவைத்தது பெரும் குற்றம் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் காணப்படும் மனிதாபிமான நிலை குறித்து நேரடியாக பார்த்து அறிந்துகொள்வதற்காகவும்பாலஸ்தீன மக்களிற்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்வதற்காகவே இராஜதந்திரிகள் அங்கு சென்றனர் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேலிய தெரிவித்ததை ஏற்கமறுத்துள்ளதுடன்   அதன் விளக்கங்கள் "இன்றைய சம்பவத்தின்தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார்

இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை  தெளிவாக நினைவூட்டுகிறது இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். ".இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் "இராஜதந்திரிகளின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

"இந்த சம்பவத்தை விசாரித்து இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்ய இஸ்ரேலை நாங்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கல்லாஸ் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக்இ இஸ்ரேலிய இராணுவத்தின் நிகழ்வுகள் குறித்த பதிப்பை மறுத்துஇ அதன் விளக்கங்கள் "இன்றைய நிகழ்வின் தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார்

இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை மெதுவான முறையில் பயன்படுத்துவதை தெளிவாக நினைவூட்டுகிறதுஇ இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறதுஇ" என்று பிரீட்ரிக் கூறினார். "நிராயுதபாணியான பொதுமக்களுக்கு ஈடுபாட்டின் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகுஇ ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ்இ "இராஜதந்திரிகளின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

"இந்த சம்பவத்தை விசாரித்துஇ இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்ய இஸ்ரேலை நாங்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறோம்இ" என்று கல்லாஸ் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருவில் நிலநடுக்கம் ஒருவர் பலி

2025-06-16 17:27:58
news-image

சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு...

2025-06-16 17:01:24
news-image

ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட்...

2025-06-16 16:00:31
news-image

இந்திய விமான விபத்து : குஜராத்...

2025-06-16 15:10:50
news-image

ஜேர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஐதராபாத் நோக்கி...

2025-06-16 14:24:46
news-image

இஸ்ரேலில் அமெரிக்க தூதரகத்திற்கு சிறிய சேதம்...

2025-06-16 13:45:25
news-image

தொழில்நுட்ப கோளாறு- புதுடில்லி நோக்கி புறப்பட்ட...

2025-06-16 12:33:37
news-image

தெஹ்ரான் மக்கள் விரைவில் கடும் விலையை...

2025-06-16 11:50:20
news-image

டெல்அவி - ஹைபாவில் நால்வர் பலி...

2025-06-16 11:23:37
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-16 09:44:46
news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56