(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர் யஸ்மின் மொஹமத் உசெய்த் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.
இதன் மூலம் உசெய்துக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இன்று புதன்கிழமை (21) பிற்பகல் நடைபெற்ற ஆண்களுக்கான 22 வயதுக்குட்பட்ட 75 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் அப்தரக்மானோவ் டெனியலை கதிகலங்கச் செய்யும் வகையில் கடும் தாக்குதல்களைத் தொடுத்த உசெய்த் 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


ஆரம்பம் முதல் கடைசி வரை துணிச்சலுடனும் மிகச் சிறந்த நுட்பத்திறனுடம் சண்டையிட்ட உசெய்த் முதல் சுற்றில் 5 மத்தியஸ்தர்கள் வழங்கிய 10 - 9, 10 - 9, 10 - 9, 10 - 9, 9 - 10 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை பெற்றார்.
முதல் சுற்றைவிட இரண்டாவது சுற்றிலும் மிக வேகமாகவும் விவேகமாகவும் உசெய்த் தாக்குதல்களை நடத்தி அப்தரக்மானோவ் டெனியலை திக்குமுக்காட வைத்தார்.
மூன்றாவது சுற்றிலும் உசெய்த்தின் அதிவேக தாக்குதல்களில் டெனியல் திணறிப்போனார்.
இந்த இரண்டு சுற்றுகளிலும் 5 மத்தியஸ்தர்களினதும் ஏகமனதான தீர்ப்புக்கு அமைய 10 - 9, 10 - 9, 10 - 9, 10 - 9, 10 - 9 என்ற புள்ளிகள் கணக்கில் உசெய்த் வெற்றிபெற்றார்.
சுகததாச அரங்கில் இதுவரை நடைபெற்று முடிந்த 50க்கும் மேற்பட்ட குத்துச் சண்டைப் போட்டிகளில் இந்தப் போட்டியே இலங்கை இரசிகர்களை உற்சாகத்திலும் பேரானந்தத்திலும்மூழ்கச் செய்தது.
உசெய்த்தின் ஒவ்வொரு தாக்குதலின்போதும் ஆரவாரம் செய்த இலங்கை இரசிகர்கள் அவரை ஊக்குவித்தவண்ணம் இருந்தனர்.
இந்த குத்துச் சண்டைப் போட்டியில் கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்ற ஒரே ஒரு இலங்கை வீரர் உசெய்த் ஆவார்.




இதேவேளை, போட்டியின் 9ஆம் நாளான நேற்றைய தினம் நடைபெற்ற அரை இறுதிப் போட்டிகளில் பங்குபற்றிய மற்றைய நான்கு இலங்கையர்கள் தோல்வி அடைந்த போதிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 54 கிலோ கிராம் எடைப் பிரிவில் தசுன்ப்ரிய சமரக்கோன், 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் பசிந்து உமயங்க மிஹிரான், 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஹேரத் கருணாநாயக்க, 61 கிலோ கிராம் எடைப் பிரிவில் தேஷான் ஜயசுந்தர ஆகியோர் தங்களது அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கங்களுடன் திருப்தி அடைந்தனர்.
இதற்கு அமைய இதுவரை இலங்கைக்கு 18 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
நாளைய தினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டி ஒன்றில் இலங்கைக்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கவுள்ளது.
22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 63 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை அலினா குடெய்ஜெனோவாவை இலங்கை வீராங்கனை ஹன்சனி விஜேசிங்க எதிர்த்து போட்டியிடவுள்ளார்.
இந்தப் போட்டியில் ஹன்சனி வெற்றிபெற்றால் தங்கப் பதக்கம் கிடைக்கும், தோல்வி அடைந்தால் வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM