இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்வியல் நடைமுறையையும், உணவு முறையையும் முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களின் சமூக பங்களிப்பு என்பது கணிசமாக குறைந்து வருகிறது.
குறிப்பாக கடந்த தசாப்தங்களில் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இன்றைய இளம் தம்பதியினர் விவரிக்க இயலாத மனம் ரீதியான துன்பங்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்நிலையில் புத்திர பேறு கிடைப்பதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பலவித குறிப்புகளையும், சூட்சம வழிபாடுகளையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: தேன்
கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் தருணத்தில் முருக பெருமானுக்கு அபிஷேகத்திற்கான தேனை வழங்குங்கள். அத்துடன் இறை தொண்டு செய்யும் ஊழியரிடம் 'அபிஷேக தேன் அருந்துவதற்கு வேண்டும்' என அன்பான முறையில் வேண்டுகோள் வையுங்கள். அவர் முருகப்பெருமானை அபிஷேகம் செய்த தேனில் சிறிதளவு பிரசாதமாக உங்களுக்கும் தருவார்.
அந்த தேனை கவனமாக சேகரித்து கொண்டு, வீட்டிற்குச் சென்று, அதனை நாளாந்தம் பக்தியுடன் சாப்பிட வேண்டும். தேன் பெண்களின் கருவறை மற்றும் கருவறையை சுற்றி இருக்கும் மாய தடைகளை அகற்றி கர்ப்பப்பையை கருவை தாங்கக்கூடிய அளவிற்கு வலிமையானதாக மாற்றும் வல்லமை படைத்தது. அதன் பிறகு பிள்ளை பேறு உங்களுக்கு கிட்டும். மகிழ்ச்சியும் உண்டாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM