இன்றைய சூழலில் வணிக ரீதியிலான சந்திப்பு, உத்தியோகபூர்வமான சந்திப்பு, விருந்துகளில் சந்திப்பு, விசேட வைபவங்களில் சந்திப்பு ஆகிய பல சந்திப்புகளில் பங்குபற்றுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இத்தகைய சூழலில் உங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது உங்களுடைய வாய்ப் பகுதியில் இருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வீசினாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்து உங்களுடன் பேசுபவர்களுக்கு அவர்களின் வாயிலிருந்து விரும்பத்தகாத துர்நாற்றம் வீசினாலோ அந்த சந்திப்பு ஒருபோதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இந்தத் தருணத்தில் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு மருத்துவ மொழியில் டான்சில் ஸ்டோன்ஸ் எனப்படும் டான்சில் கற்களும் காரணம் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
துர்நாற்றம், தொண்டையில் ஏதேனும் ஒன்று சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு, தொடர் இருமல், காது வலி, தொண்டை வலி, குரலில் மாற்றம், தொண்டை பகுதியில் வெண்மை நிற திட்டுகள் ஏற்படுவது... போன்ற அறிகுறிகள் இருந்தால், நீங்கள் உடனடியாக அருகில் இருக்கும் காது, மூக்கு, தொண்டை உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
உணவு துகள்கள், பாக்டீரியா கிருமிகள், சளி ஆகியவை டான்ஸில் பகுதிகளில் தங்குவதாலும் சிக்குவதாலும் அதன் பிறகு கல்சியம் படிமங்களாக படியும்போது அவை கடினமான கட்டிகளாக உருமாற்றம் பெறுகின்றன. இவை பெரும்பாலும் வெண்மை அல்லது மஞ்சள் நிற சிறிய அளவிலான கூழாங்கற்களை போல் தொண்டை பகுதியில் உருவாகிறது.
பொதுவாக இத்தகைய டான்சில் கற்கள் சில நாட்களுக்குள் தானாகவே கரைந்து மறைந்து விடும். சிலருக்கு அங்கேயே தங்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தும். இவர்கள் முதலில் உப்பு நீர் கொப்பளித்தல் எனும் நிவாரண சிகிச்சையை சாப்பிட்ட பிறகோ அல்லது காலையில் எழுந்ததும் மேற்கொள்ள வேண்டும். இதன் பிறகும் பாதிப்பு நீண்டால் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். வெகு சிலருக்கே அங்கு ஏற்பட்டிருக்கும் கட்டிகளின் அளவு இயல்பான அளவை விட கூடுதலாக இருந்தால்... அது நோயாளிக்கு கடுமையான மன பாதிப்பை ஏற்படுத்தினால்... வைத்தியர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம் என பரிந்துரைப்பார்கள்.
சிகிச்சைக்குப் பிறகு அல்லது சிகிச்சையை தொடரும் தருணங்களில் வாய்வழி சுகாதாரம் குறித்து வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் அனைத்து ஆரோக்கிய நடைமுறைகளையும் உறுதியாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்க இயலும்.
- வைத்தியர் வேணுகோபால்
தொகுப்பு : அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM