மனநிறைவு அளிக்கும் புனிதமான சேவை: புத்தபிரானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் மக்களுக்கு மகத்தான வழியில் மலிபன் உதவியுள்ளது

21 May, 2025 | 04:56 PM
image

கண்டியில் உள்ள புத்தபிரானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுள்ள ஆலயம் ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கான யாத்திரிகர்களை ஈர்க்கிறது. பதினாறு ஆண்டுகள் என்ற நீண்ட காலத்திற்குப் பிறகு, “ஸ்ரீ தலதா வழிபாடு” மீண்டும் இடம்பெற்றதுடன், அதனுடன் இணைந்து, ஒரு மிகப்பெரிய பக்தி அலையும் எழுந்தது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதில் பங்குபற்றினர். புனித தந்த தாதுவை அருகில் சென்று தரிசிப்பதற்காகாக எத்தனையோ பேர் நீண்ட நாட்கள் வரிசையில் காத்திருந்தார்கள். எத்தனையோ பேர் திறந்த வெளியில் தரையில் தூங்கினார்கள். 

“ஸ்ரீ தலதா வழிபாட்டின்” ஆரம்ப நாளிலிருந்தே, மலிபன் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ஒன்றிணைந்து எளிமையான ஆனால் சக்திவாய்ந்த நல்லெண்ணத்துடன் அங்கு தமது சேவைகளை முன்னெடுத்தது. அன்னதானம். சோர்வடைந்த யாத்திரிகளுக்கு சூடான தேநீர், மலிபன் பிஸ்கட்டுகள், மலிபன் யஹபோஷா மற்றும் மலிபன் பால் ஆகியவற்றை பரிமாறினார்கள்.  இது வெறும் உணவு மட்டுமல்ல. இது ஒரு சௌகரியம். இது ஒரு பரிச்சயம். இது ஒரு அக்கறை.

ஆனால் மலிபனின் அக்கறை இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. கருணையில் வேரூன்றிய புத்தாக்கத்துடன், ஒவ்வொரு பால் கோப்பையிலும் ஒரு பொது விரைவுக் குறியீடு (QR), ஒரு உயிர்காப்பு உள்ளது. மிக இலகுவாக ஸ்கேன் செய்வதன் மூலம் யாத்திரிகர் ஒருவர் விசேட வைத்திய நிபுணர் மற்றும் இரண்டு தாதியர்களுடன் தயாராக இருக்கும் அம்பியுலன்ஸ் வண்டியை வரவழைக்க முடியும். இந்த கட்டமைப்பு GEO Tag தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனடியாகக் கண்டுபிடித்து பதில் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இடமளிக்கிறது. இது அதிநவீன மருத்துவ பராமரிப்பு முறையாக, எவ்வித ஆரவாரங்களுமின்றி, ஒரு கோப்பை பால் மற்றும் தேநீரில் பின்னப்பட்டுள்ளது. ஏனெனில் அக்கறை என்பது வெறுமனே சௌகரியத்தைப் பற்றியது மாத்திரமல்ல, அது பாதுகாப்பையும் பற்றியதாகும். 

பல மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் வருகை தரும் இந்த ஆலயச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது எளிதான காரியமல்ல. ஆனால் உண்மையான பக்தி என்பது தான் நடந்து செல்லும் நிலத்தை மதிப்பதாகும். மலிபன் நிறுவனம் கழிவுகளைச் சேகரித்து, தரம் பிரிப்பதற்காக பிரத்தியேகமான அணியொன்றையும் நியமித்துள்ளது. ஒவ்வொரு நாளும், அந்தப் பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டு, சேகரிக்கப்பட்ட கழிவுகள் நகர சபையிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இது அக்கறை என்பது மக்களுடன் மட்டும் முடிவதில்லை. மாறாக பூமி வரை நீண்டுள்ளது என்பதற்கான சான்றாகும்.

மலிபனைப் பொறுத்தவரையில் இது ஒரு மனநிறைவான சேவை. புனிதமான ஒரு முயற்சி. இறைவனை நம்பி வருகை தருகின்றவர்கள் மௌனமாக பிரார்த்தித்தவாறு வரிசையில் நிற்கும்போது, மலிபன் அவர்களுக்குப் பின்னால் அமைதியாக பக்கபலமாக நிற்கிறது. இதன் மூலமாக பிரபலத்தைத் தேடாமல், எப்போதும் அவர்களுடன் உடனிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முகமாக விளங்கும் Zesta-வின் விளம்பர...

2025-06-19 15:41:05
news-image

இலங்கை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில்...

2025-06-18 17:29:14
news-image

உலகளாவிய நிலைத்தன்மை அங்கீகாரத்தின் இரண்டாவது ஆண்டை...

2025-06-18 13:28:22
news-image

செலான் ஹரசர, பிரத்தியேக சலுகைகள் ,...

2025-06-18 13:21:37
news-image

John Keells Properties-TRI-ZEN நிர்மாணச் செயற்திட்டத்தின்...

2025-06-18 12:42:10
news-image

ஒரியன்ட் பைனான்ஸ் இப்போது ஜனசக்தி பைனான்ஸ்...

2025-06-17 11:25:11
news-image

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு...

2025-06-16 15:06:21
news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07