ஜோர்தானில் இதய சத்திரசிசிச்சைக்கு பின்னர் காசாவின் யுத்தபூமிக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஏழுமாத குழந்தை - பிபிசி

Published By: Rajeeban

21 May, 2025 | 04:00 PM
image

Adnan El-BurshBBC News Arabic Gaza reporter

Lina ShaikhouniBBC World Service

 

காசா பள்ளத்தாக்கின் வடபகுதியில் உள்ள தற்காலிக கூடார அல்- சாட்டி அகதிமுகாமில் , 33 வயது எனாஸ் அபு டக்கா தனது கரங்களில் தனது சிறிய மகள் நீவினை ஏந்தியிருக்கின்றார்.

காலை நேர வெயிலை தவிர்ப்பதற்காக அவள் பின்னால் ஒரு மின்விசிறி இயங்கிக்கொண்டிருக்கின்றது.

நீவினின் உடல்நிலை எந்தநேரத்திலும் மோசமடையலாம் என எனாஸ் கவலை கொண்டுள்ளார்.நீவின் பிறந்து ஏழு மாதங்களே ஆகின்றது.அவள் யுத்தத்தின் போது இதயத்தில் சிறிய பாதிப்புடன் பிறந்தாள்.

காசாவில் மருத்துவவசதிகள் சிதைவடைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் தனது மகளை காப்பாற்றுவதற்கு பட்டபாடுகளை எனாஸ் விபரித்தார்.பெரிய பழுப்பு நிற கண்களுடன் நிவீன் அழுகின்றாள்,பதறுகின்றாள்.

'இந்த யுத்தம் அவளுக்கு மிகவும் தாங்க முடியாததாக கடுமையானதாக உள்ளது "என எனாஸ் பிபிசிக்கு தெரிவித்தார்.'அவளின் உடல் எடை கூடவில்லை,அடிக்கடி நோய்வாய்படுகின்றாள் "என்றார் அவர்.

காசாவிற்கு வெளியே நிவீனிற்கு  கிடைத்த சமீபத்தைய மருத்துவ வசதியே அவள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஹமாசும் இஸ்ரேலும் யுத்தநிறுத்தத்தை கடைப்பிடித்தவேளை நீவினுடன்  உட்பட காசாவை சேர்ந்த 29 குழந்தைகள் மருத்துவசிகிச்சைக்காக ஜோர்தானிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.நீவினுடன் அவரது தாயாரும், மூத்த சகோதரியும் ஜோர்தான் சென்றனர்.

அமெரிக்காவிற்கான விஜயத்தின் போது ஜோர்தான் மன்னர் அப்துல்லா காசாவை சேர்ந்த 2000 பிள்ளைகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்ட பின்னர்,ஜோர்தானிற்கு அழைத்து செல்லப்பட்ட முதல் தொகுதி சிறுவர்கள் இவர்கள்.

இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்தே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன ,அவர்கள் ஜோர்தானிற்கு கொண்டு செல்லப்படும் பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தனர்.

ஜோர்தானில் உள்ள மருத்துவர்கள் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்,நிவீன் மெல்லமெல்ல குணமடைய தொடங்கினாள்.

எனினும் இரண்டுவாரங்களில்இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்ததை தொடர்ந்து  யுத்தநிறுத்தம் முடிவிற்கு வந்தது.மீண்டும் யுத்தம் முழுமையான அளவில் இடம்பெறுகின்றது.

பல வாரங்களாக இந்த செய்திகளை எனாஸ் ஜோர்தானில் தனது மகளின் மருத்துவமனை கட்டிலில் இருந்தபடி அவதானித்தார்.காசாவில் உள்ள தனது மற்யை இரண்டு குழந்தைகள் கணவர் குறித்து அவர் கவலை கொண்டிருந்தார்.

ஆனால் மே மாதம் 12ம் திகதி இரவு ஜோர்தான் அதிகாரிகள் எனாசிடம் அவரையும் அவரது பிள்ளையும் திருப்பி காசாவிற்கு அனுப்பபோவதாக தெரிவித்தனர்.நிவீனின் சிகிச்சை முடிவடைந்துவிட்டது என அவர்கள் குறிப்பிட்டனர்.

எனாஸ் அதிர்ச்சியடைந்தார்.

'நாங்கள் யுத்தநிறுத்தம் நடைமுறையிலிருந்தவேளை அங்கிருந்து சிகிச்சைக்காக வந்தோம் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர்களால் எப்படி எங்களை திருப்பி அனுப்ப முடியும் என அவர் தெரிவிக்கின்றார் , ஏமாற்றமடைந்தவராக காணப்படுகின்றார்.

எனாஸ் தற்போது காசாவில் தனது கணவர் மற்றும் ஏனைய பிள்ளைகளுடன் இணைந்துகொண்டுள்ளார்.நிவீனிற்கு சிகிச்சைகளை முழுமையாக வழங்காமல் ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பிவிட்டனர் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.நிவீனின் நிலைமை மீண்டும் பாதிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

'எனது மகளின் உடல்நிலை ஆபத்தானதாக உள்ளது அவள் மரணிக்கலாம்" என தெரிவிக்கும் எனாஸ்,அவள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளால், சில சமயங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டு நீலநிறமாக மாறிவிடுகின்றாள் என்கின்றார் அவர்.

மருத்துசிசிச்சை முடிவடைந்த பின்னர் 17 சிறுவர்களை காசாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக ஜோர்தான் அறிவித்தது.மறுநாள் நோய்வாய்ப்பட்ட நான்கு சிறுவர்கள் காசாவிலிருந்து ஜோர்தானிற்கு அனுப்பப்பட்டனர்.

அனைத்து சிறுவர்களும் சிறந்த உடல்நிலையுடன் காணப்படுகின்றனர் என பிபிசிக்கு தெரிவித்துள்ள ஜோர்தானின் அதிகாரிகள்,தாங்கள் முழுமையான சிகிச்சையை வழங்கவில்லை என்பதை நிராகரித்துள்ளனர்.

சிறுவர்கள் உடல்நிலையில்முன்னேற்றம் ஏற்பட்டதும் அவர்களை திருப்பி அனுப்புவதே ஆரம்பத்திலிருந்து எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ள ஜோர்தான் அதிகாரிகள்,அரசியல் காரணங்கள் உட்பட பல காரணங்களிற்காக இது அவசியம் என்கின்றனர்.

பாலஸ்தீனியர்களை அவர்களது நிலத்தில் வைத்திருப்ப எங்கள் கொள்கை , அவர்கள் தங்கள் பகுதிக்கு இடம்பெயர்வதை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை,என ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு பிபிசிக்கு தெரிவித்துள்ளது.

17 சிறுவர்களை திருப்பி அனுப்பினால் மேலும் பல காசா சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கலாம் என ஜோர்தான் தெரிவிக்கின்றது.

எனினும் ஜோர்தானில் சிகிச்சை வழங்கப்பட்ட சிறுவர்களிற்கு தொடர்ந்து சிறந்த பராமரிப்பு அவசியம்,யுத்த வலயத்திற்கு அவர்கள் திரும்பிவருவதால் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என ஹமாசின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்