யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி, ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் இன்றைய தினம் (21) கையளிக்கப்பட்டது.
ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450க்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர்.
இந்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் யாழ். மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உட்பட சைவ சமய ஆர்வலர்கள் இணைந்துகொண்டனர்.
இந்த மகஜரின் பிரதிகளை வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM