(நெவில் அன்தனி)
ஆசிய கிரிக்கெட் பேரவையினால் (ACC) ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தியை சபையின் செயலாளர் தேவஜித் சைக்கியா மறுத்துள்ளார்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காக ஆசிய கிரிக்கெட் பேரiவியின் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகுவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது.
ஆனால், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
'ஆசிய கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிய கிண்ணம் மற்றும் வளர்ந்துவரும் பெண்கள் ஆசிய கிண்ணம் ஆகியவற்றில் பங்குபற்றுவதில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
'இது போன்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை ஆகும். ஏனேனில் ஆசிய கிரிக்கெட் பேரவை நிகழ்வுகள் குறித்து நாங்கள் விவாதிக்கவோ, அது தொடர்பான எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவோ இல்லை. இது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு நாங்கள் எதனையும் எழுதவும் இல்லை. இப்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் மற்றும் தொடரவுள்ள ஆடவர் மற்றும் மகளிருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் விஜயம் தொடர்பிலேயே நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்' என தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM