இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது - இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரி கடும் சீற்றம்

Published By: Rajeeban

21 May, 2025 | 02:03 PM
image

இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது என இஸ்ரேலின் முன்னாள்  இராணுவஅதிகாரியொருவர் சாடியுள்ளார்.

ஒரு நல்லறிவு உள்ள நாடு பொதுமக்களிற்கு எதிராக போர்தொடுக்காது,குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக கொல்லாது,மக்களை மிகப்பெரிய அளவில் இடம்பெயரச்செய்யாது என இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளரும்இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் பிரதி பிரதானியுமான யயிர் கொலான் வானொலி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறவெறிக்காலத்து தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் தமது வரலாறு முழுவதும் படுகொலைகளை துன்புறுத்தல்களை சந்தித்த யூதமக்கள்,தற்போது முற்றிலும் மனச்சாட்சிக்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவஅதிகாரியின் கருத்துக்களிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்து இஸ்ரேலின் வீரமிக்க படைவீரர்களிற்கும்,எதிரான மூர்க்கத்தனமான தூண்டுதல் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்தக் கருத்துக்களை "எங்கள் வழக்கமான மற்றும் ரிசர்வ் வீரர்களுக்கு எதிரான மோசமான இரத்தக்களரி அவதூறு" என்று அழைத்தார் அதே நேரத்தில் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கோலன் "தெரிந்தே பொய்களைப் பரப்புகிறார் இஸ்ரேலையும் ஐ.டி.எஃப்-ஐயும் உலகின் பார்வையில் அவதூறு செய்கிறார்" என்று கூறினார்.

இதற்கிடையில் முன்னாள் பிரதமர் எகுட் பராக் கோலனை "ஒரு துணிச்சலான நேரடியான மனிதர்" என்று அழைத்தார் மேலும் அவரது கருத்துக்கள் இஸ்ரேலின் அரசியல் தலைவர்களைக் குறிக்கின்றன வீரர்களை அல்ல என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49
news-image

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்படவில்லை...

2025-06-20 15:23:30
news-image

ஈரான் கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்துகின்றது...

2025-06-20 15:16:05