(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதில் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஒருபுறம் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், மறுபுறம் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கள்வர்கள் என விமர்சித்த எமது உறுப்பினர்களிடம் பேரம் பேசி, அவர்களின் ஆதரவுடன் சபைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
அதிகாரத்துக்காக எதையும் செய்யும் சம்பிரதாயபூர்வ அரசியலிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்து மக்களுக்கான சேவைகளை வழங்குவோம்.
அரசாங்கம் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாம் தலையிடப் போவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் 50 சதவீதத்தை பெற்றுள்ளவற்றில் நிச்சயம் நாம் ஆட்சி அமைப்போம்.
குரங்குகள் சனத்தொகை கணக்கெடுப்பைப் போன்று நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை தவிர, பிரயோசனமான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் முதன்முறையாக இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மக்களின் செய்தியை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM