முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி பலி

Published By: Digital Desk 3

21 May, 2025 | 12:37 PM
image

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு  சென்ற  சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில்  சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை 7 மணியளவில்  பாடசாலைக்கு  செல்லும் வழியில் குறித்த விபத்து  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ்  வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், குறித்த  விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு வயதுடைய  மாதீஸ்வரன் நர்மதா என்ற தரம் மூன்றில்  கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்விகற்கும்  பாடசாலை மாணவியே குறித்த சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார்.

அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும்  வேளைகளில் குறித்த கர்நாட்டுக்கேணி  பகுதியில் பொலிஸ் யாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கர்நாட்டுக்கேணி  மக்கள்  விசனம் தெரித்துள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதியும் கடந்த  இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில்  விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55