(நா.தனுஜா)
நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (24) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் அவர், 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ள அவர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து பரந்துபட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி இவ்விஜயத்தின்போது நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் தனியார்துறை பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM