(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது.
போட்டியின் எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் இளையோர் பெண்கள் பிரிவில் ஹிருணி பெர்னாண்டோவும் மாலிதி தித்தகால்லவும் ஆண்கள் பிரிவில் சன்ச்சித் பெரேராவும் இலங்கைக்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுகொடுத்தனர்.
ஹிருணி பதக்கம் வென்றதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இப் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு படைத்தனர்.
ஹிருணியின் மூத்த இரட்டை சகோதரிகளான சச்சினி, யசினி ஆகிய இருவரும் ஏற்கனவே வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்தனர். அத்துடன் இந்த மூவருமே ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் மூன்று சுற்றுகளும் தாக்குப் பிடித்து சிறப்பாக சண்டையிட்டிருந்தனர்.
இளையோர் பெண்கள் பிரிவு குத்துச்சண்டை போட்டிகளில் ஹிருணி பெர்னாண்டோ, மாலிதி தித்தகால்ல ஆகிய இருவரும் தங்களைவிட அனுபவம்வாய்ந்த பலசாலிகளான வியட்நாம், கஸக்ஸ்தான் வீராங்கனைகளுடன் மிகச் சிறப்பாக சண்டையிட்டு தோல்விகளைகத் தழுவினர்.
54 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் வியட்நாம் வீராங்கனை வூ தி தொம் என்பவருக்கு ஈடுகொடுத்து சண்டையிட்ட ஹிருணி 3 சுற்றுகளையும் தாக்குப் பிடித்து பலத்த பாராட்டைப் பெற்றார். எனினும் இறுதியில் 0 - 5 (26 - 30, 25 - 30, 24 - 30, 26 - 30, 25 - 30) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஹிருணி தோல்வி அடைந்தார்.
57 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீராங்கனை துர்சிங்காலி அக்நூர் என்பவருக்கு எதிராக 3 சுற்றுககளிலும் ஒரளவு திறமையாக சண்டையிட்ட மாலிதி தித்தகால்ல 0 - 5 (24 - 30, 24 - 30, 25 - 30, 24 - 30, 23 - 30) என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.
ஆண்களுக்கான 75 கிலோ கிராம் எடைப் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தான் வீரர் பேர்ட்அலி ஸாசுலானின் கடூரமான தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் சுற்றிலேயே சன்ச்சித் பெரேரா வெளியேறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM