சுற்றுலா மூலம் கிழக்கை மாற்றியமைக்க முடியும் ; ஆனால் நாம் செயல்பட்டால் மட்டுமே!

21 May, 2025 | 10:39 AM
image

பேராசிரியர் W.H.M.S. சமரதுங்க மே 4, 2025 அன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17வது ஆண்டு பொதுப் பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய பட்டமளிப்பு உரை 

தமிழில் 

ஆசிரியர்: திருமதி. எம்.என்.எப். நிஷ்லா மனாசிர்

ஆராய்ச்சி அறிஞர் முதுநிலை பட்டப்படிப்பு பிரிவு

முகாமைத்துவ மற்றும் வணிக பீடம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

ஒலுவில்.

நீண்ட காலமாக புவியியல் மற்றும் வரலாற்றால் ஒதுக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணம், இன்று வாய்ப்புகளின் வாசலில் நிற்கிறது. அதன் பொன்னிற கடற்கரைகள், கலாசார பன்முகத்தன்மை மற்றும் ஆழமான வேரூன்றிய பாரம்பரியம் ஆகியவை தீவின் மிகச்சிறந்த சுற்றுலா மண்டலங்களில் ஒன்றாக அதனை காண்பித்தாலும், இப்பகுதி பொருளாதார ரீதியாக பின்தங்கியும் நிறுவன ரீதியாக பலவீனமாகவும் காணப்படுகிறது. 

இதன் அடிப்படையில், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் (SEUSL) பேராசிரியர் W.H.M.S. சமரதுங்க அவர்களின் சமீபத்திய பட்டமளிப்பு உரை ஒரு சரியான நேரத்தில் செய்யப்பட்ட பிரதிபலிப்பாகவும், ஒரு உணர்ச்சிகரமான நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருந்தது.

கிழக்கு மாகாணம் நெடுங்காலமாகவே போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் போதுமான வளரச்சி இல்லாமை ஆகிய இரண்டு பெரும் சுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. தொழில்துறை முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற முக்கியமான அம்சங்களில் இப்பகுதி தொடர்ந்து பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது. ஏராளமான இயற்கை மற்றும் மனித வளங்களைக் கொண்டிருந்தாலும், இப்பகுதி வறுமை, இளைஞர்களின் வேலையின்மை மற்றும் குறைந்த தொழில் முனைவோர் போன்ற சவால்களுடன் போராடுகிறது. இருப்பினும், இந்த சவால்கள் தான் கிழக்கை நிலையான, உள்ளடக்கிய மாற்றத்துக்கான முன்னுரிமையாக மாற்றுகின்றன.

இலங்கை சுற்றுலாவில் பயன்படுத்தப்படாத ஒரு பெரிய சக்தி

சுற்றுலா என்பது அந்நிய செலாவணி அல்லது பொழுதுபோக்கின் ஆதாரம் மட்டுமல்ல. அது அமைதி, கண்ணியம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் ஒரு அடையாளம் ஆகும். ஆகும். உலகளவில் சுற்றுலா ஒவ்வொரு 11 வேலைகளிலும் 1 வேலையாகவும் மற்றும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட USD  2 டிரில்லியன் வருமானமாகவும் பங்களிப்பு செய்கிறது. இதற்கு மாறாக இலங்கை - ஒரு வெப்பமண்டல சொர்க்கம் (Tropical Paradise) என்று புகழ் பெற்றிருந்தாலும் - 2024இல் 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே ஈர்த்துள்ளது. 

இதன் மூலம் $3.17 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது (SLTDA, 2024). குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் திறனைக் கருத்தில் கொள்ளும்போது இந்த எண்கள் ஏமாற்றம் அளிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் அமைதியான கடற்கரை, தேசிய பூங்காக்கள், துடிப்பான திருவிழாக்கள் மற்றும் பலதரப்பட்ட கலாசாரங்களைக் கொண்ட சமூகங்கள் இருப்பதால், இப்பகுதி கலாசாரம், இயற்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த சுற்றுலாவுக்கான இலங்கையின் முக்கியமான அடையாளமாக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. பாசிக்குடா, அறுகம்பே மற்றும் குமண போன்ற இடங்கள் உலகத்தரம் வாய்ந்த கவர்ச்சியைக் கொண்டிருந்தாலும், அவை போதுமான அளவு விளம்பரப்படுத்தப்படவில்லை மற்றும் அங்கு வழங்கப்படும் சேவைகளும் போதுமானதாக இல்லை. இப்பகுதி கடற்கரை சுற்றுலா மட்டுல்ல, சூழல் விடுதிகள் யாத்திரை பாதைகள், பாரம்பரிய நடைபாதைகள் மற்றும் சமையல் மரபுகள் போன்ற கருப்பொருள் வாய்ப்புகளுக்கும் இடமளிக்கிறது. 

இருப்பினும், சாத்தியக்கூறுகள் மட்டும் போதாது. சுற்றுலா சார்ந்த வளர்ச்சியின் மிகப்பெரிய தடைகளில் ஒன்று, இலக்கு தள அளவிலான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகும். கிழக்கு மாகாணத்துக்கான ஒரு மூலோபாய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் 2009இல் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதன் பரிந்துரைகள் எந்த அளவிற்கு செயற்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பேராசிரியர் சமரதுங்க அவர்கள் இந்த சிதறிய அணுகுமுறையை மாற்றி, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்து, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா திட்டமிடல் மாதிரியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

கிழக்கில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் இடங்களில் நடந்த தவறுகளைப் பிரதிபலிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளால் உள்ளூர் சமூகங்கள் பாதிக்கப்படுவதையும், கலாசாரங்கள் வணிகப் பொருளாக மாற்றப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார். 

மாறாக, இந்த பிராந்தியம் பொறுப்பான மற்றும் புத்துயிர் அளிக்கும் சுற்றுலாவிற்கான ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

யானைத் தந்தக் கோபுரத்திலிருந்து களப்பணிக்கு: பல்கலைக்கழகத்தின் பங்கு

உரையின் முக்கிய செய்திகளில் ஒன்று, SEUSL மற்றும் அதன் கல்வி சமூகம் ஆற்றக்கூடிய மாற்றத்தக்க பங்கு ஆகும். பல்கலைக்கழகங்கள் இனி பட்டங்களை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல. அவை புதுமையின் என்ஜின்களாகவும், தொழில் முனைவோருக்கான அடைக்கள மையங்களாகவும், கலாசார பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகவும் செயல்பட வேண்டும். வாய்ப்புகள் குறைவாக உள்ள இப்பகுதியில், பல்கலைக்கழகம் முன்னணியில் இருந்து வழிநடத்தவேண்டிய கடமை உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.

பேராசிரியர் சமரதுங்க அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உள்ளூர் சமூகங்களுடன் தங்களது ஈடுபாட்ட அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆய்வுகள் வெறும் சமூக யதார்த்தங்களை விளக்குவதோடு மட்டுமல்லாமல், தீர்வுகளை உருவாக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றார். மீன்பிடி குடும்பங்களின் இடம்பெயர்வு குறித்து ஆராய்வது முதல், பழங்கால நீர்ப்பாசன முறைகளை வரைபடமாக்குவது வரை முஸ்லிம் ஆலயங்களைப் பாதுகாப்பது முதல் விருந்தினர்-வழங்குநர் உறவுகளைப் புரிந்துகொள்வது வரை, இப்பகுதியில் பயன்படுத்தப்படாத அறிவின் பொக்கிஷம் நிறைந்துள்ளது. அந்த அறிவானது கொள்கைகளை வடிவமைக்கவேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார்.

உதாரணமாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக உந்து மையம் (Business Incubator Cell), சுற்றுலாத்துறையில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு உதவலாம். விவசாய சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். இப்பகுதியின் கதைகள் மற்றும் வரலாற்றை டிஜிட்டல் முறையில் சொல்லும் தளங்களை உருவாக்க உதவலாம்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கான விரிவான திட்டங்களை (tourism master plans) உருவாக்க முடியும். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் முதுகலைப் பட்டப்படிப்பு ஆய்வுகள், இப்பகுதியின் வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு நேரடியாகப் பயன்படலாம். சுருங்கச் சொன்னால், பல்கலைக்கழகங்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாகப் பங்காற்றும் கூட்டாளிகளாக மாற வேண்டும்.

எல்லைகளற்ற எதிர்காலத்திற்கு இளைஞர்களை மேம்படுத்துதல்

பேராசிரியர் சமரதுங்கவின் உரையின் மிகவும் உருக்கமான பகுதிகளில் ஒன்று, பட்டதாரிகளை நோக்கியதாக இருந்தது. கையில் பட்டங்களுடன் இருக்கும் அவர்கள் வெறும் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, வேலைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இருப்பினும், இப்பகுதியில் இளைஞர்களிடையே தொழில் முனைவோர் கலாசாரம் துடிப்பாக இல்லாதது கவலை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 

இதை மாற்ற, கல்வி பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். விமர்சன சிந்தனை, பல கலாசார புரிதல் மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு ஆகியவை இயல்பானதாக மாற வேண்டும். 

சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கான வெளிப்பாடு – இன்டரன்ஷிப்கள், பரிமாற்றங்கள் அல்லது கூட்டு திட்டங்கள் மூலம் விரிவுபடுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் தங்குவதற்கும், திரும்புவதற்கும், மறு முதலீடு செய்வதற்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மாற்றம் என்பது கொழும்பிலிருந்து வரும் அதிசயம் அல்லது நன்கொடையாளர் நிதி உதவியுடன் கூடிய பெரிய திட்டங்கள் மூலம் நிகழ்வது அல்ல என்று பேராசிரியர் வலியுறுத்தினார். அது அடிமட்டத்திலிருந்து வர வேண்டும் - தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை உபசரிக்கும் குடும்பங்களிலிருந்து, சுற்றுலா நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்களிடமிருந்து, தங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் கலைஞர்களிடமிருந்து, கலாச்சாரத்தை ஆராயும் ஆராய்ச்சியாளரக் ளிடமிருந்து மற்றும் பல்லுயிர் பாதுகாக்கும் சிவில் சமூகத்திடமிருந்து அது உருவாக வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

உள்ளூர் தலைமை மற்றும் கூட்டாண்மைக்கான அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு உள்ளூர் முயற்சிகள் மட்டும் போதாது, கூட்டு நிர்வாகமும் அவசியம். அமைச்சுக்கள் மாகாண சபைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் முதலீட்டாளர்கள் மத நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையை உருவாக்க வேண்டும். 

பல சமயங்களில், சுற்றுலா தொடர்பான முடிவுகள் தனித்தனியாக எடுக்கப்படுகின்றன அல்லது மேலிருந்து கீழாக செயற்படுத்தப்படுகின்றன. ஒரு புதிய கூட்டாண்மை மாதிரி அவசரமாகத் தேவைப்படுகிறது.

இது வேறுபட்ட சமூகங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான தளங்களை உருவாக்குதல், நல்லிணக்க இலக்குகளுடன் சுற்றுலாவை இணைத்தல், பெண்கள் மற்றும் விளிம்புநிலை குழுக்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் - உள்ளூர் மக்கள் பார்வையாளர்களாக இல்லாமல் சுற்றுலா மதிப்புச் சங்கிலியில் செயலில் பங்கேற்பவர்களாக இருப்பதை உறுதி செய்தல்.

பட்டமளிப்பிலிருந்து கூட்டு உறுதிப்பாட்டிற்கு

கைத்தட்டல் அடங்கி, பட்டதாரிகள் தங்கள் குடும்பத்தினரை ஆரத் தழுவியபோது, பேராசிரியர் சமரதுங்கவின் நிறைவுரை மனங்களில் எதிரொலித்தது: 

"இந்த பட்டமளிப்பு விழா ஒரு முடிவாக இல்லாமல், ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இந்த பட்டங்களும் பட்டமளிப்பு உடைகளும் தனிப்பட்ட சிறப்புரிமையைக் குறிக்காமல், பொறுப்பைக் குறிக்கட்டும். தனிப்பட்ட இலட்சியத்துடன் அல்ல, ஒரு கூட்டுப் பணியுடன் - கிழக்கை மறுவடிவமைக்க நாம் இங்கிருந்து செல்வோம்."

இது ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோள். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்ட அல்லது போருக்குப் பிந்தைய பகுதி என்று முத்திரை குத்தப்பட்டதில் போதுமான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதன் கடற்கரைகள், கோயில்கள், நன்னீர் நிலைகள் மற்றும் மொழிகள் வெறும் சுற்றுலா தலங்கள் மட்டுமல்ல, பெருமை, வேலைவாய்ப்பு மற்றும் மீள்தன்மையின் அடித்தளங்கள் என்ற புதிய கதையை எழுத வேண்டிய நேரம் இது.

அதற்கு, அனைவரும் கைகோர்க்க வேண்டும். இளைஞர்கள் கனவு காண வேண்டும், பல்கலைக்கழகம் வழிநடத்த வேண்டும், அரசு செவிசாய்க்க வேண்டும், மற்றும் சமூகங்கள் அதிகாரமளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கிழக்கு மாகாணம் வரைபடத்தில் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், தெற்காசியாவில் உள்ளடக்கிய, அடிமட்ட சுற்றுலா மாற்றத்திற்கான ஒரு மாதிரியாக மாறும். 

- பேராசிரியர் மனோஜ் சமரதுங்க, 

(ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறை)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள்...

2025-06-19 16:06:09
news-image

பொறுப்புக்கூறலுக்கான நியமங்களை பாகுபாடான முறையில் பிரயோகிப்பதில்...

2025-06-19 13:44:47
news-image

மத்திய கிழக்கு பதற்ற நிலையால் இலங்கையின்...

2025-06-18 17:58:23
news-image

வடக்கில் 5941 ஏக்கர்கள் நிலப்பிரச்சினை வர்த்தமானி...

2025-06-18 14:13:57
news-image

இலங்கையின் புதிய மனித புதைகுழி தமிழர்களின்...

2025-06-18 12:23:05
news-image

இலங்கையிலுள்ள வீட்டுப் பணியாளர்களை அத்தியாவசிய பணியாளர்களாக...

2025-06-17 16:11:24
news-image

அடுத்த தேர்தல்?

2025-06-16 17:47:31
news-image

இலங்கை கடல் பரப்பில் கரையொதுங்குவது என்ன?...

2025-06-16 16:29:56
news-image

முட்டாள்களாக்கப்படும் தமிழ் மக்கள்

2025-06-16 10:15:35
news-image

அரசியலமைப்புப் பேரவையில் மீளப்பெறப்பட்ட அநுரவின் பரிந்துரை

2025-06-15 18:29:30
news-image

இலங்கையை கட்டிப் போட்ட இந்தியா

2025-06-15 16:07:02
news-image

மக்கள் காங்கிரஸ், பிரமுகர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதா?

2025-06-15 16:04:36