பதுளை நகரில் மக்கள் மத்தியில் தம்பியை பல முறை வெட்டியி அண்ணன் !

Published By: Vishnu

20 May, 2025 | 07:27 PM
image

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதலில் முடிவடைந்தது.

பதுளை நகர மையத்தில் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், அண்ணன் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதோடு சரிமாரியாக வாள் வீச்சு ஊடாக காயப்படுத்திக் கொண்டிருந்தார்.

குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தம்பியார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"நீ அருகில் வந்தால், உன்னை வெட்டுவேன்" என்று சந்தேக நபரான அண்ணன்  குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்ற போது அனைவருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் கத்திக் கொண்டிருந்ததால், அனைவரும் குறித்த நபரை நெருங்க பயந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிஸ் வாகன சாரதி மற்றும் சார்ஜென்ட் நிலந்த என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்.

பல பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்தமை பாராட்டத்தக்கது,

குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 14:45:23
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03