வவுனியா, ஶ்ரீராமபுரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் நேற்று மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தால் கொண்டு செல்லப்பட்ட நீர் நாய் மரணமடைந்துள்ளது.

வவுனியா, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக அப்பகுதி கிராம அலுவலர் மூலம் வழங்கப்பட்ட தகவலையடுத்து அதனை மீட்டுக் கொண்டு சென்றனர். 

குறித்த பாடசாலை மைதானத்தில் நின்ற போது நீர் நாயின் கழுத்துப் பகுதியில் நாய் ஒன்று கடித்தமையால் காயமேற்பட்டிருந்தது. குறித்த காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையிம் சிகிச்சை பலனின்றி நீர் நாய் இறந்துள்ளது.

வவுனியாவில் முதன்முறையாக கண்டு பிடிக்கப்பட்ட குறித்த  நீர் நாய் ஒரு அரியவகை விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.