இன்றைய திகதியில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒன்றரை மாதத்திற்கு பிறகு ரெண்டரை மாதம் வரை மாலை வேளையில் அழத்தொடங்குவார்கள். இதற்கான காரணம் எம்முடைய இளம் தலைமுறை பெற்றோர்களுக்கு துல்லியமாக தெரிவதில்லை. இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்குரய நிவாரண சிகிச்சை குறித்து வைத்தியர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் பச்சிளம் குழந்தைகள் மாலை வேளையில் காரணம் இல்லாமல் அழத்தொடங்கினால்... அவர்களை உடனடியாக தாய்மார்கள் அரவணைக்க வேண்டும்.
தோலோடு தோல் இணையும் போது பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வை உணர்வார்கள். அதனுடன் சிறிது நேரம் கழித்து அவர்களை படுக்கையில் உறங்க வைத்து அவர்களின் இரண்டு கால்களையும் சைக்கிளிங் போல் மெதுவாக இயக்கினால் இத்தகைய வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு இருந்தால் சீரடையும்.
மேலும் குழந்தையை படுக்க வைத்து அதனுடைய தொப்புள் பகுதியில் சிறிது எண்ணெயை தடவி மசாஜ் செய்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
வாயு கோளாறுகளால் உண்டாகும் இத்தகைய பாதிப்பினை சீர்படுத்த பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் அருந்திய பிறகு அவர்களை தோளில் சாய்த்து அவர்களின் முதுகில் லேசாக தட்டினால் ஏப்பம் வரும். ஏப்பம் வந்த பிறகு குழந்தையை உறங்க வைத்தால் இந்த காலிக் பெயின் வராமல் தடுக்கலாம்.
இத்தகைய நிவாரணங்களுக்கும் பிறகும் குழந்தைகள் காரணமில்லாமல் மாலை வேலைகளில் அழ தொடங்கினால் உடனடியாக அருகில் இருக்கும் குழந்தைகள் நல வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும் ,சிகிச்சையும் பெற வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.
வைத்தியர் சாகுல்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM