பொலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான ஹிர்த்திக் ரோஷன்- பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து இரு துருவமாக மிரட்டும் 'வார் 2 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வார் 2 'திரைப்படத்தில் ஹிர்த்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், க்யாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
பெஞ்சமின் ஜாஸ்பர் ஏசிஎஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். ஸ்பை திரில்லர் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா தயாரித்திருக்கிறார்.
ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 'வார் 2 'திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கும் , ஹிர்த்திக் ரோஷனின் சர்வதேச ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமைந்திருப்பதால் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இதனிடையே இதே திகதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி 'திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM